யோகாவை மதத்துடன்‌ தொடர்புப்படுத்தாமல்‌, அறிவியல்பூர்வமான முறையில்‌ உலகம்‌ முழுவதும்‌ கொண்டு சேர்க்க ஈஷாவில்‌ ஆலோசனை கூட்டம்

கோவை: இந்திய யோகா சங்கத்தின்‌ 2-வது ஆட்சி மன்றக்‌ குழு கூட்டம்‌ கோவை ஈஷா யோகா மையத்தில்‌ இன்று (பிப்ரவரி 10) நடைபெற்றது.

கோவை: இந்திய யோகா சங்கத்தின்‌ 2-வது ஆட்சி மன்றக்‌ குழு கூட்டம்‌ கோவை ஈஷா யோகா மையத்தில்‌ இன்று (பிப்ரவரி 10) நடைபெற்றது. 



இதில்‌, இச்சங்கத்தின்‌ தலைவரும்‌ பதஞ்சலி யோக பீடத்தின்‌ நிறுவனருமான ஸ்வாமி ராம்தேவ்‌, ஆட்சி மன்ற குழுவில்‌ உறுப்பினர்களாக இருக்கும்‌ ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு, ரிஷிகேஷில்‌ உள்ள பரமர்த்‌ நிகேதன்‌ அமைப்பின்‌ தலைவர்‌ ஸ்வாமி சிதானந்த்‌ சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு மாறிலங்களைச்‌ சேர்ந்த ஆன்மீக அமைப்புகளின்‌ தலைவர்கள்‌ பங்கேற்றனர்‌. 

வாழும்‌ கலை அமைப்பின்‌ நிறுவனர்‌ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்‌ அவர்கள்‌ வீடியோ கான்பரன்‌சிங்‌ மூலம்‌ பங்கேற்றார்‌.



இக்கூட்டத்தில்‌ பெருந்தாரளான மக்களுக்கு யோகாவை அறிவியல் பூர்வமாக கொண்டு சேர்க்கும்‌ வழிமுறைகள்‌ குறித்தும்‌, அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது குறித்தும்‌ கலந்து ஆலோசிக்கப்பட்டது. 

மேலும்‌, இதற்கு ஆன்மீக அமைப்புகள்‌ மற்றும்‌ அரசாங்கம்‌ எந்தவிதத்தில்‌ தங்கள்‌ பங்களிப்பு அளிக்க முடியும்‌ என்பது குறித்தும்‌ ஆலோசிக்கப்பட்டது. 

குறிப்பாக, யோகாவை மதத்துடன்‌ தொடர்புப்படுத்தாமல்‌, அறிவியல்பூர்வமான முறையில்‌ உலகம்‌ முழுவதும்‌ கொண்டு சேர்க்கும்‌ பணியில்‌ ஈடுப்பட்டு வரும்‌ பல முக்கிய ஆன்மீக அமைப்புகளின்‌ தலைவர்கள்‌ ஒன்றாக கூடி கலந்தாலோசிக்க இந்த சந்திப்பு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.



கூட்டத்தில்‌ பங்கேற்க வந்த அனைவருக்கும்‌ சத்குரு அவர்கள்‌ சிறப்பான வரவேற்பு அளித்தார்‌. அவர்கள்‌ ஈஷாவில்‌ உள்ள தியானலிங்கம்‌, லிங்கபைரவி, ஆதியோக உள்ளிட்ட இடங்களுக்கு நேற்று (பிப்‌.9) சென்று தரிசனம்‌ செய்தனர்‌.

இந்திய யோகா சங்கம்‌ (Indian Yoga Association) என்பது இந்தியாவில்‌ உள்ள பல்வேறு முன்னணி யோகா அமைப்புகளின்‌ சுய ஒழுங்குமுறைக்கான ஒரு சங்கம்‌ ஆகும்‌. ஈஷா அறக்கட்டளை, பதஞ்சலி யோக பீடம்‌, வாழும்‌ கலை அமைப்பு போன்ற அமைப்புகள்‌ கோடீக்கணக்கான மக்களுக்கு யோக பயிற்‌ துகளை பாரம்பரிய முறையில்‌ அர்ப்பணிப்புடன்‌ கற்றுக்கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி ஈஷா யோக அமைப்பின் சார்பாக கொடுக்கப்பட்ட செய்தி குறிப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...