குறிச்சி மற்றும்‌ குனியமுத்தூர்‌ பகுதிகளில்‌ பாதாள சாக்கடை மற்றும்‌ குடிநீர்‌ திட்டப்பணிகளை விரைந்து முடிக்க மேலாண்மை இயக்குனர்‌ உத்தரவு

கோவை: குறிச்சி மற்றும்‌ குனியமுத்தூர்‌ ஆகிய பகுதிகளில்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய மேலாண்மை இயக்குனர்‌ டாக்டர்‌ சி.என்‌. மகேஸ்வரன்‌ இ.ஆ.ப அவர்கள்‌ பாதாள சாக்கடை திட்டம்‌ மற்றும்‌ குடிநீர்‌ திட்டப்பணிகளை ஆய்வு செய்து, பணிகளை திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள்‌ பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்‌ என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

கோவை: குறிச்சி மற்றும்‌ குனியமுத்தூர்‌ ஆகிய பகுதிகளில்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய மேலாண்மை இயக்குனர்‌ டாக்டர்‌ சி.என்‌. மகேஸ்வரன்‌ இ.ஆ.ப அவர்கள்‌ பாதாள சாக்கடை திட்டம்‌ மற்றும்‌ குடிநீர்‌ திட்டப்பணிகளை ஆய்வு செய்து, பணிகளை திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள்‌ பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்‌ என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

கோவை மாவட்டம்‌, குறிச்சி மற்றும்‌ குனியமுத்தூர்‌ ஆகிய பகுதிகளில்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய மேலாண்மை இயக்குனர்‌ டாக்டர்‌ சி.என்‌. மகேஸ்வரன்‌ இ.ஆ.ப அவர்கள்‌ பாதாள சாக்கடை திட்டம்‌ மற்றும்‌ குடிநீர்‌ திட்டப்பணிகளை இன்று (10.02.2020) ஆய்வு செய்து, பணிகளை திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள்‌ பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்‌ என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌. 

பின்னர்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய மேலாண்மை இயக்குனர்‌ அவர்கள்‌ தெரிவிக்கையில்:

கோவை மாநகராட்சியுடன்‌ புதிதாக இணைக்கப்பட்டுள்ள குறிச்சி மற்றும்‌ குனியமுத்தூர்‌, வார்டு எண்‌ 87-100 பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம்‌ ரூ. 591.14 கோடியிலும்‌, குடிநீர்‌ திட்டப்பணிகள்‌ ரூ. 202.30 கோடியிலும்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியம்‌ மூலம்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டங்கள்‌ குறிச்சி மற்றும்‌ குனியமுத்தூர்‌ பகுதிகளின்‌ 14 வார்டுகள்‌ பயன்பெறுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை குடிநீர்‌ திட்டப்பணிகளில்‌ 82 சதவீதமும்‌, பாதாள சாக்கடை திட்டப்பணிகளில்‌ 43 சதவீதமும்‌ நிறைவடைந்துள்ளன. பாதாள சாக்கடை திட்டத்தின்‌ சிறப்பு அம்சமாக அனைத்து கழிவு நீரேற்று நிலையங்களிலும்‌ முதன்‌ முறையாக துர்நாற்றம்‌ அகற்றும்‌ கருவி பொருத்தப்பட உள்ளது. மேலும்‌ கழிவுநீர்‌ சேகரிக்கும்‌ குழாய்கள்‌ சாலையில்‌ தோண்டி பதிக்கப்பட்ட உடன்‌, குழிகள்‌ மூடப்பட்டு, சீரான இடைவெளியில்‌ சாலை பகுதியில்‌ காங்கிரீட்‌ தளம்‌ அமைத்து சாலைகள்‌ செப்பனிடப்பட்டு வருகிறது.

குடிநீர்திட்டப்பணிகளுக்காக, இப்பகுதிகளில்‌ 18 புதிய குடிநீர்‌ மேல்நிலை தொட்டிகளும்‌, 2 குடிநீர்‌ சமநிலை தொட்டிகளும்‌, குடிநீர்‌ பகிர்மான குழாய்‌ பதிக்கும்‌ பணிகளும்‌ நடைபெற்று நிறைவடையும்‌ நிலையில்‌ உள்ளது. குடிநீர்‌ திட்டப்பணிகள்‌ வரும்‌ மே-2020, பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ அக்டோபர்‌ - 2021-ல்‌ முழுமையாக முடிவடைந்து மக்கள்‌ பயனுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

கோவைப்புதூர்‌ மற்றும்‌ குறிச்சி பகுதிகளில்‌ இத்திட்டப்பணிகளை ஆய்வு செய்து, ஏற்கனவே கோவைப்புதூர்‌ பகுதியில்‌ கான்கிரீட்‌ தளம்‌ அமைத்த 41 கிலோமீட்டர்‌ சாலைகளின்‌ இருபுறமும்‌ அமைந்துள்ள வீடுகளுக்கு புதிய குடிநர்‌ மற்றும்‌ கழிவு நீர்‌ இணைப்புகளை பகுதிவாரியாக திட்டமிட்டு, மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு அனைத்து பணிகளையும்‌ நிறைவு செய்து, சாலைகளை முழுமையாக சீரமைப்பதற்கு கோவை மாநகராட்சியிடம்‌ உடனுக்குடன்‌ ஒப்படைக்கும்படி குடிநீர்‌ வடிகால்‌ வாரிய அதிகாரிகளை அறிவுறுத்தினார்‌.

இப்பணிகளை செயல்முறைபடுத்துவதற்காகவும்‌, பணிகளின்‌ தரத்தை ஆய்வு செய்வதற்காகவும்‌ மற்றும்‌ காலநிர்ணயம்‌ செய்வதற்காகவும்‌ மாநகராட்சி மற்றும்‌ குடிநீர்‌ வடிகால்‌ வாரிய அதிகாரிகள்‌ அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

கோவைப்புதூர்‌ பகுதிகளில்‌ உள்ள சரஸ்வதி நகர்‌ மற்றும்‌ பரிபர்ணா கார்டன்‌ பகுதிகளில்‌ புதிய வீட்டிணைப்பு மற்றும்‌ அதன்‌ தொடர்‌ பணிகள்‌ மூலம்‌ 78 வீட்டிணைப்புகள்‌ முடிக்கப்பட்டு, சுமார்‌ 2 கிலோமீட்டர்‌ நீள சாலைகள்‌ முழுமையாக சீர்செய்யப்படவுள்ளது.

இன்று, கோவைப்புதூர்‌ மற்றும்‌ குறிச்சி பகுதிகளில்‌ பாதாள சாக்கடை திட்டம்‌ மற்றும்‌ குடிநீர்‌ திட்டப்பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களின்‌ போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும்‌ ஏற்படாதவாறு குழாய்கள்‌ பதித்தல்‌, புதிய வீட்டிணைப்புகள்‌ மற்றும்‌ அதன்‌ தொடர்‌ பணிகளை திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள்‌ நிறைவேற்றி பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்‌ என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டங்களின்‌ முழுமையான செயலாக்கத்திற்கு பின்‌ குறிச்சி மற்றும்‌ குனியமுத்தூர்‌ பகுதிகளின்‌ 14 வார்டுகளும்‌ துர்நாற்றமற்ற முழுமையான சுகாதார வசதியும்‌, குடிநீர்‌ வசதியும்‌ பெறும்‌ என தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய மேலாண்மை இயக்குனர்‌ டாக்டர்‌ சி.என்‌. மகேஸ்வரன்‌ இ.ஆ.ப அவர்கள்‌ தெரிவித்தார்கள்‌.



இவ்வாய்வின்‌ போது ஆலோசகர்‌ எஸ்‌ சம்பத்குமார்‌, மேற்பார்வை பொறியாளர்‌ என்‌. முரளி, நிர்வாக பொறியாளர்கள்‌ ரமேஷ்குமார்‌, பத்மநாபன்‌ மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌. 

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...