பசுந்தேயிலைக்கு போதிய விலையில்லை..! கண்டு கொள்ளாத மத்திய மாநில அரசுகள் - கோத்தகிரியில் விவசாயிகள் போராட்டம்

கோவை: கடந்த 30 ஆண்டுகாலமாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அகதிகளாக பிற மாவட்டங்களில் தஞ்சம் புக காரணமாக உள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று, பிப் 9 ஆம் தேதி கோத்தகிரியில் நடைபெற்றது

கோவை: கடந்த 30 ஆண்டுகாலமாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அகதிகளாக பிற மாவட்டங்களில் தஞ்சம் புக காரணமாக உள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று, பிப் 9 ஆம் தேதி கோத்தகிரியில் நடைபெற்றது. 

பசுந்தேயிலைக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டு அகதிகளாக வெளியேறுவதும் மீதமுள்ள விவசாயிகளின் வறுமையை பயன்படுத்தி கந்து வட்டிக்காரர்கள் கொடுமைப்படுத்துவதும், வங்கிகளின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய எந்தவிதமான கடன் உதவிகளும் ஏழை விவசாயிகளுக்கு சென்று சேராததை கண்டித்தும், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



மேலும், பசுந்தேயிலை விவசாயிகளுக்கு தொழிற் சாலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 100 கோடிக்கு மேல் இன்னும் வழங்க நடவடிக்கை எடுக்காத தேயிலை வாரியத்தை கண்டித்தும், கோத்தகிரி குன்னூர், உதகை, கூடலூர், மஞ்சூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த தேயிலை வாரிய அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. 

மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேயிலை கலப்படத்தின் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், பண்டைய பழங்குடி படுகர் சமுதாயத்தை ஆதிவாசி பட்டியலில் சேர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் காேத்தகிரியி்ல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ரமணன் தலைமை தாங்கினார். செவணன கவுடர், ஜோகிகவுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Newsletter

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...