கோவையில் மதங்களை கடந்த தைப்பூச திருவிழா; கிறிஸ்தவ ஆலயத்தில் பக்தர்களுக்கு அன்னதானம்

கோவை: நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக போத்தனூர் அருள் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு எதிரே உள்ள கிறிஸ்துவ கோவில் மண்டபத்தில் அன்னதான ஏற்பாடுகளுக்கு இடவசதிகள் அளிக்கப்பட்ட நிகழ்வு பாராட்டுகளை பெற்றுள்ளது.


கோவை: கோவையில் மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் அருள் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு எதிரே உள்ள கிறிஸ்துவ கோவில் மண்டபத்தில் அன்னதான ஏற்பாடுகளுக்கு இடவசதிகள் அளிக்கப்பட்ட நிகழ்வு பாராட்டுகளை பெற்றுள்ளது.



இப்படி பல்வேறு மொழி, மதம் இனம் என பல பிரிவுகளை கொண்ட நம் நாட்டில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் ஒரு மதத்தை சார்ந்தவர்கள் மற்றொரு மதத்தை சார்ந்தவரின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுவதும் அவர்களுக்கு துணை நிற்பதும் பாராட்டுக்கு உரியது என 

இந்த நிலையில் இன்று கோவை போத்தனூர் பகுதியிலுள்ள அருள் முருகன் ஆலயத்தில் 43வது ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோவிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு உணவு ஏற்பாடுகள் செய்ய இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் போத்தனூர் பகுதியை சுற்றியுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பலர் ஆர்வமுடன் நிதி உதவி அளித்து ஊக்கப்படுத்தியுள்ளனர்.



அதேபோல புனித ஜோசப் கிறிஸ்தவ ஆலய வளாகம் அருகிலுள்ள பிஷப் அம்புரோஷ் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்க தேவையான இட வசதிகள் ஒதுக்கப்பட்டது.

அதுபோல கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான இட வசதிகளும் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பக்தர்கள் கூறும்போது:-

இன்று நடைபெற்ற தைப்பூச திருவிழாவானது வெகு விமர்சியாக இருந்தது.

மேலும் பல்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு பிறர் உணர்வுகளை புரிந்து கொள்வது பாராட்டுக்குரியது. இது போன்ற மதநல்லிணக்க செயல்பாடுகள் நல்ல உணர்வுகளை எடுத்துக்காட்டுவதுடன் நல்லது செய்ய எங்களையும் தூண்டுகிறது என தெரிவித்தார்.

அதேபோல கோவில் நிர்வாக தரப்பினர் கூறும்போது:-

அருள் முருகன் ஆலயம் இன்று 43வது ஆண்டு தைப்பூசத்தை கொண்டாடுகிறது. இது இந்துக்களின் உணர்வுகளை மட்டும் சார்ந்தது அல்ல. மற்ற சகோதர மதத்தினரின் நல்ல உணர்வுகளால் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த கோவில் வளர்ச்சிக்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பங்களிப்பது மகிழ்ச்சிக்கும் மதநல்லிணக்கத்திற்க்கும் உரியது என தெரிவித்தார்.

மதங்களை கொண்டு மனிதத்தை பிளவுபடுத்தும் காலகட்டத்தில் மனிதனுக்காக தான் மதம் ,

மதத்திற்காக மனிதன் அல்ல என்பதை உணர்த்தும் அருள் முருகன் ஆலயத்தின் சிறப்புகள் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...