வால்பாறையில் தைப்பூச விழா கொண்டாட்டம்..! அரோகரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் காவடி ஊர்வலம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள மிகப்பழமையான ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவிலின் 15ம் ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான காவடி ஊர்வலம் இன்று நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள மிகப்பழமையான ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவிலின் 15ம் ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான காவடி ஊர்வலம் இன்று நடைபெற்றது. 



ஸ்ரீ சுப்பிரமணியரை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற அங்க அலகு காவடி குத்தியும், பறவை காவடியில் தொங்கியபடியும் காவடி மற்றும் பால்குடம் சுமந்து வந்தனர். முன்னதாக நல்லகாத்து மைதானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேளதாள வாத்தியங்கள் முழங்க கரகாட்டத்துடன் நல்லகாத்து மைதானத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் புதிய பேருந்து நிலையம், ஸ்டான்மோர் சந்திப்பு காந்தி சிலை வளாகம் பழைய பேருந்து நிலையம் வழியாக கோவிலை வந்தடைந்தது. அரோகரா கோஷத்துடன் ஸ்ரீ சுப்பிரமணியசாமிக்கு பால் மற்றும் தீர்த்த அபிஷேகத்திற்குப்பின் தீபாரதனை காட்டப்பட்டது. 

தொடர்ந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, நகராட்சி ஆணையர் பவன்ராஜ். வட்டாட்சியர் வெங்கடாசலம் துவக்கி வைத்தனர். வால்பாறை அரசு கல்லூரி முதல்வர் முரளீதரன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்னதானம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.



மேலும், இரவு வள்ளி தெய்வானையுடன் திருமுருகன் திருவீதி உலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இரவு மகா அபிஷேகமும் தொடர்ந்து வான வேடிக்கையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தைப்பூச விழா குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர். இவ்விழாவில் வால்பாறை பகுதியிலுள்ள 56 எஸ்டேட்ட பகுதியிலுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...