கோவை: கோவை அவிநாசி சாலையில் அதிமுக கொடி கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்டு கால் இழந்த பெண்ணிற்கு கிராம உதவியாளர் பணி நியமன ஆணையை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.
கோவை: கோவை அவிநாசி சாலையில் அதிமுக கொடி கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்டு கால் இழந்த பெண்ணிற்கு கிராம உதவியாளர் பணி நியமன ஆணையை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.
கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி கோவை அவிநாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதியில் நடந்த விபத்தில் லாரி மோதி சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்கிற அனுராதா படுகாயமடைந்தார். சாலையோரத்தில் நடப்பட்டிருந்த அதிமுக கொடிகம்பம் சாய்ந்ததே விபத்திற்கு காரணமென உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜேஸ்வரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் ராஜேஸ்வரியின் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில், இடதுகால் எலும்புகள் மற்றும் இரத்த நாளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து ராஜேஸ்வரியின் இடதுகாலை அகற்றினர்.
இந்நிலையில், இன்று ஜல்லிக்கட்டு மற்றும் மண்டல அளவிலான வங்கியாளர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, விபத்தில் இடதுகாலை இழந்த ராஜேஸ்வரிக்கு சங்கனூர் கிராமத்திற்கான கிராம உதவியாளராக பணி நியமன ஆணையை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். பணி நியமன ஆணை பெற்ற ராஜேஸ்வரி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.