மேட்டுப்பாளையத்தில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த காட்டூர் மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா; திரளான பக்தர்கள் தரிசனம்

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காட்டூர் பகுதியில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயிலில் இன்று கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காட்டூர் பகுதியில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயிலில் இன்று கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது.

நேற்று இரவு முதல் கோவிலில் யாக சாலைகள் அமைத்து பல்வேறு சிறப்பு வேள்விகள் நடத்தப்பட்டது. இதையடுத்து, திருப்பள்ளி எழுச்சியினை தொடர்ந்து மங்கள இசை முழங்க நான்காம் கால வேள்விகள் நடத்தப்பட்டு மகாமாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.



தமிழ் முறையில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கோவிலைச் சுற்றி வலம் வந்து கோவிலின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமானது நடைபெற்றது. திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா திருநெறிய தெய்வத்தமிழ் முறையில் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மகாமாரியம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...