கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில் இன்று காலை திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில் இன்று காலை திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை அரசு மருத்துவமனையில் தினமும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 1700க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில், மாவட்டத்தின் முக்கியமான இந்த மருத்துவமனையில் இன்று காலை வெளிநோயாளிகளின் சித்த மருத்துவப் பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மருத்துவமனையின் தனியார் காவலர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அருகே இருந்த தீயணைப்பு கருவியை பயன்படுத்தி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக நோயாளிகள் யாரும் இல்லாததாலும், தனியார் காவலர்கள் அதிவேகமாக வந்து தீயை அணைத்ததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மருத்துவமனையின் உட்புறத்தில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.