நீலகிரி: தேவேந்திர குல வேளாளர் ஜான்பாண்டியன் கட்சியை சேர்ந்த சிலர் பழனி செல்லும் அரசுப்பேருந்து ஓட்டுநரை தாக்கிய காரணத்தினால் குன்னூரில் 3 நேரமாக அரசு பேருந்து ஓட்டுனர்கள் சாலையிலேயே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

தேவேந்திர குல வேளாளர் ஜான்பாண்டியன் குன்னூர் அருவங்காட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, குன்னூரில் இருந்து அருவங்காடு நோக்கி கட்சியினருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பழனியில் இருந்து ஜான் பாண்டியன் கட்சியினருக்கு முன்பு சென்ற அரசுப்பேருந்து வழிவிடவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அக்கட்சியினை சேர்ந்தவர்கள் அரசு பேருந்து ஓட்டுநர் பாபுவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட இதர அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஆங்காங்கே தங்களது பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குன்னூரில் 3 நேரமாக அரசு பேருந்து இயங்காமல் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

பின்னர், பேருந்து ஓட்டுநரை தாக்கியவர்ளை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே, பேருந்து ஓட்டுநரை தாக்கி விட்டு மேட்டுப்பாளையம் சாலையில் தப்பி ஓட முயன்றவர்களை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.