நடுவுல கொஞ்சம் சாலையை காணோம்..! மேட்டுப்பாளையத்தில் தரமற்ற சாலையின் 3 அடி பள்ளத்தில் சிக்கிய லாரி!

கோவை: மேட்டுப்பாளையம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட தரமற்ற சாலையில் ஏற்பட்ட மூன்று அடி பள்ளத்தில் லாரி சிக்கிய நிலையில் முறையாக சாலை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட தரமற்ற சாலையில் ஏற்பட்ட மூன்று அடி பள்ளத்தில் லாரி சிக்கிய நிலையில் முறையாக சாலை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஓடந்துரை ஊராட்சியின் ராமசாமி நகர் பகுதியில் இருந்து பழத்தோட்டம் வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது

சுமார் 16.75 கோடி மதிப்பீட்டில் இந்த சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வந்த நிலையில், சாலை முடியும் பகுதியான சிறுமுகை அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் சாலைக்கு தார் ஊற்றி செப்பனிட்டு பணியை முடித்துள்ளனர். பழத்தோட்டம், லிங்காபுரம், வச்சினம்பாளையம் போன்ற பகுதிகளின் இணைப்பு சாலையாக இந்த சாலை உள்ளது.



எனவே, வாழை விவசாயம் அதிகம் உள்ள பகுதி என்பதால் விவசாய இடுபொருட்கள் மற்றும் உரங்கள் எடுத்துச் செல்ல இந்த சாலையில் அதிக லாரி போக்குவரத்து இருக்கும். இந்த நிலையில், பணிகள் நேற்று மாலை முடிவடைந்த நிலையில் அந்த வழியே வந்த லாரி ஒன்று இந்த சாலையை கடக்கும் போது திடீரென அதன் வலது புற சக்கரங்கள் சாலையில் சுமார் மூன்று அடிக்கு பள்ளம் ஏற்பட்டு லாரி சிக்கிக் கொண்டது.

இதனை தொடர்ந்து லாரியை கிரேன் உதவியுடன் மீட்கப்பட்ட நிலையில் சாலை அமைத்த ஒரே நாளில் சாலையின் நடுவே மூன்று அடிக்கு பள்ளம் ஏற்பட்டது குறித்தும், அதன் தரம் குறித்து அச்சம் தெரிவித்த கிராம மக்கள், சாலையின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பின்னர் அதனை ஆய்வு செய்த அதிகாரிகள் அடியில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டிருந்ததால் பள்ளம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்தனர்.

இருப்பினும் பவானி ஆற்றின் கரையோரம் பழத்தோட்டம் பகுதி உள்ளதால் தற்போது சாலை அமைத்து வருவதை அதிகாரிகள் உரிய முறையில் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள், ஆற்றுப் பகுதி என்பதால் முறையாக சாலையின் இரு புறங்களிலும் தடுப்புச் சுவர்களை அமைத்து பாதுகாப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...