கோவை: குடியுரிமை திருத்த சட்டத்தினால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் முஸ்லிம்களின் குடியுரிமைக்காக திமுக தலைவர் ஸ்டாலின் போராடுகிறார் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை: குடியுரிமை திருத்த சட்டத்தினால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் முஸ்லிம்களின் குடியுரிமைக்காக திமுக தலைவர் ஸ்டாலின் போராடுகிறார் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் ராமர் கோவில் அறக்கட்டளை தொடர்பான அறிவிப்பை வரவேற்கிறோம் என தெரிவித்தார். ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டுமென்பது நீண்ட கால கோரிக்கை எனவும் இதனால் இந்தியாவில் வாழும் ஒட்டு மொத்த இந்துக்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளதாக கூறினார்.
இன்னும் சில ஆண்டுகளில் ராமர் கோவில் கட்டப்படும் என தெரிவித்த அவர், தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நிகழ்வில் தமிழ், சமஸ்கிருதம் என பிரித்து பார்ப்பதை தவிர்த்து அனைத்து இந்திய மொழிகளும் கடவுளிடம் செல்லும் வழியாக உள்ளது என்றும் பாஜக அனைத்து மொழிகளையும் சமமாக பார்ப்பதாகவும் கூறினார்.

குடியுரிமை திருத்த சட்டத்தினால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் முஸ்லிம்களின் குடியுரிமைக்காகப் போராடுவதை ஏற்க முடியாது என தெரிவித்த அவர், நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்ததை வரவேற்பதாகவும் அடுத்த ஒரு மாதத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் சிஏஏ, காஷ்மீர் விவகாரம், ராமர் கோவில் குறித்து பாஜக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மேலும், நாட்டில் பொருளாதார மந்த நிலை பலமுறை வந்துள்ளது எனவும் பொருளாதார மந்த நிலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறிய அவர், பிரசாந்த் கிஷோர் வட இந்தியரா, தென் இந்தியரா, திராவிடரா, ஆரியரோ என ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் எனவும் டெல்லி தேர்தலுக்கு பிறகு தமிழக பாஜக தலைவர் அறிவிக்கப்படுவார் என தெரிவித்தார். ஜெயக்குமார் பாஜக தலைவர் அல்ல எனவும் கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கும் எனவும் அதிமுக - பாஜக இடையே சுமூகமான உறவு உள்ளது என அவர் கூறினார்.