கோவை: வள்ளலார் தினமான 8.02.2020 அன்று கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகள் செயல்படாது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.

2020-ம் ஆண்டு 8.02.2020 அன்று “வள்ளலார் தினம்” கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய தினம் கோவை மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும் உக்கடம் ஆடு அறுவைமனை, சிங்காநல்லூர் ஆடு அறுவைமனை, சத்தி ரோடு மற்றும் போத்தனூர் மாடு அறுவை மனைகள், துடியலூரில் ஆடு அறுவைமனை மற்றும் மாநகராட்சியில் கீழ் இயங்கும் 10 மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த உத்தரவை மீறிச் செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.