கோவை: இந்தியாவின் பன்னாட்டு பொறியியல் குழும நிறுவனம் மற்றும் தனியார் துறை பாதுகாப்பு தளவாட நிறுவனமான லார்சன் அண்டு டூப்ரோ (எல் அண்ட் டி) மற்றும் ஏவுகணை தொழில் நுட்பங்களில் உலகில் முன்னணி வகிக்கும் எம்பிடிஏ நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு நிறுவனமான எல்அண்ட்டி எம்பிடிஏமிசைல் சிஸ்டம்ஸ் (எல்.டி.எம்.எம்.எஸ்.எல்) ஏவுகணை ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை கோவையில் நிறுவியுள்ளது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளை கருத்தில் கொண்டு, எல்.டி.எம்.எம்.எஸ்.எல் நிறுவனம், ஏவுகணை உபகரண ஒருங்கிணைப்பு, வெடிபொருள் இல்லாத ஏவுகணை ஒருங்கிணைப்பு மற்றும் ஏவுகணை துணை தொழில் நுட்பங்கள் மற்றும் ஏவுகணை ஆயுதம் செலுத்தல் அமைப்புகளுக்கான சோதனை வசதியை கோவையில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 16,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைத்துள்ளது.
2017ம் ஆண்டில் நிறுவப்பட்ட எல்.டி.எம்.எம்.எஸ்.எல் சில முக்கியமான ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. மேலும் புதிய தொழிற்சாலை 2020 காலண்டர் ஆண்டிலிருந்து ஏவுகணைகள் செலுத்த உதவும் லாஞ்சர் மற்றும் கட்டுப்பாட்டு செயல்பாட்டு கருவிகள் உள்ளிட்ட ஏர்ஃப்ரேம் பிரிவுகளில் அதிநவீன சோதனை சாதனங்களைப் பயன்படுத்தி அதிநவீன ஆயுத தளவாடங்களை உற்பத்தி செய்து வழங்க தொடங்கும்.
இது குறித்து எல் அண்ட் டி எம்பிடிஏமிசைல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜே. பாட்டீல் கூறுகையில், “எல் அண்ட் டி எம்பிடிஏமிசைல் சிஸ்டம்ஸ் நிறுவனம், உள்நாட்டு உற்பத்தி மூலம் இந்திய ஆயுதப்படைகளுக்கு மேம்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஏவுகணை தளவாடங்களை வழங்குவதற்காக முழுமூச்சுடன் மிகதுரிதமாக செயல்பட்டு வருகின்றது. கோவையில் இந்த புதிய ஒருங்கிணைந்த தொழிற்சாலையை உருவாக்குவது எங்களது இந்த செயல்பாட்டில் முதல் படியாகும். எங்களது அடுத்த தலைமுறை தயாரிப்புகள் சிலவற்றை, லக்னோவில் நடைபெறும் ராணுவத்தளவாடக் கண்காட்சியில் நாங்கள் காட்சிப்படுத்த இருக்கிறோம்.” என்றார்.
எல் அண்ட் டி எம்பிடிஏமிசைல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும் வாரிய உறுப்பினருமான பாஸ்குவேல்டி பார்டோலோமியோ கூறுகையில், கோவையில் இந்த புதிய நவீன தொழிற்சாலையை கட்டமைப்பது எல் அண்ட் டி மற்றும் எம்பிடிஏமிசைல் சிஸ்டம்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க கூட்டு முயற்சியாகும். இந்த நிறுவனம் வழங்கும் தொழில்நுட்பம் மற்றும் மனிதவள திறன்களுடன், இந்தியா தனது ஆயுதப்படைகளிலும் ஏற்றுமதி சந்தையிலும் மேம்படுத்தப்பட்ட மிகச் சமீபத்திய புதிய தலைமுறை பாதுகாப்பு தொழில் நுட்பத்தை வழங்க இயலும்.” என்றார்.
குறுகிய தூரத்திற்கு தரையில் இருந்து வான் நோக்கிப்பாயும் ஏவுகணை அமைப்புக்களை (எஸ்.ஆர்.எஸ்.ஏ.எம்) இந்திய கடற்படையின் வான் பாதுகாப்பு தேவைக்கும் வழங்க எல்.டி.எம்.எம்.எஸ்.எல் நிறுவனம் ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த முன்னேற்ற செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, எல்.டி.எம்.எம்.எஸ்.எல் நிறுவனம், எக்சோசெட் எம்.எம் 40 பிளாக் 3 கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணையையும், 5-வது தலைமுறை கவச வாகனங்களைத்தாக்கி அழிக்கும் திட்டமிடப்பட்ட ஏவுகணையையும் (ஏடிஜிஎம் 5) இந்திய ஆயுதப்படைகளுக்கு வழங்குகிறது.
ஏற்கனவே பிரான்சில் ராணுவ பணியில் இணைக்கப்பட்டுள்ள ஏடிஜிஎம் 5, எம்எம்பிகவச பீரங்கி வாகனத்தை தாக்கி அழிக்கும் ஆயுதத்தின் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களைக் களத்தில் கொண்டுவரவிருக்கிறது. ஏடிஜிஎம் 5, இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு மற்றும் உருவாக்கப்பட்ட (ஐடிடிஎம்) தயாரிப்பாகும். இது இந்தியாவுக்கு முக்கிய தொழில்நுட்ப மாற்றங்களைக்கொண்டு வருவதை உள்ளடக்கியதாக இருக்கும்.
எல் அண்ட் டி நிறுவனம், எல்.டி.எம்.எம்.எஸ்.எல் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளையும், எம்.பி.டி.ஏ நிறுவனம் 49 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்.டி.ஐ) கொள்கைக்கு முழுவதும் இணங்க இந்த கூட்டு செயல்பாடு அமைந்துள்ளது.