கோவை: டெல்லி மருந்துகள் பிரதிநிதி நிறுவனம், கோவை சரவணம்பட்டியில் புதிய பயிற்சி நிறுவனத்தை துவக்கியுள்ளனர். இது தமிழ்நாட்டின் கிளையாக செயல்படும். பார்மா தொழில் மற்றும் மருத்துவ பிரதிநிதியாக வர வேண்டும் என விரும்புவோருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்க முதல் முறையாக ஒரு பயிற்சி நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது. பார்மா துறையில் சிறப்பான முறையில் பணியாற்ற இந்த பயிற்சி தயார்படுத்தும்.

டெல்லி மருத்துவ பிரதிநிதிகள் (DIMR), நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் பங்கா இந்த நிறுவனத்தை துவக்கி வைத்தார். துவக்க விழாவில், DIMR பணியாளர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். டெல்லி மருத்துவ பிரதிநிதிகள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ பிரதிநிதியாக வர விரும்புவோருக்கு 90 நாட்கள் பயிற்சி அளிக்க திட்டம் உள்ளது. இந்த பயிற்சி மையம், பயிற்சி அளிப்பதோடு வேலை வாய்ப்புக்கும் உதவி செய்கிறது. இளநிலை பட்டம் பெற்றவர்கள், இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இந்த பயிற்சியில் சேர தகுதியுள்ளவர்கள். நான்கு அடுக்கு பயிற்சி திட்டத்தில், தகவல் தொடர்பு திறன், ஆளுமை திறன், மருத்துவ பெயர்கள் மற்றும் அதை புரிந்து கொள்ளுதல் பயிற்சிகள் தரப்படுகின்றன.
டெல்லி மருத்துவ பிரதிநிதிகள் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த மூன்று மாத சான்றிதழ் படிப்பில், பார்மா மேலாண்மையில், பயிற்சி புத்தகம், மனித உடலமைப்பு மற்றும் அங்கவியல் உள்ளிட்ட கல்வி முறைகள் இடம் பெறுகின்றன’ என்றனர்.
பார்மா துறையில் சிறந்த பணியாளர்களையும், தொழில் முனைவோரையும் உருவாக்க வேண்டும் என்பது தான் இதன் முக்கிய நோக்கம். மருத்துவ பிரதிநிதிகளுக்கு பயிற்சி தர ஆசியாவிலேயே இந்த நிறுவனம் மட்டும் தான் உள்ளது. பயிற்சியில் பங்கேற்போருக்கு பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களில் பணியாற்றவும், வேலை வாய்ப்பு பெறவும் இது வழிகாட்டுகிறது.
இந்த படிப்பில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர் நிறுவனத்தின் இயக்குனர் பிரவீன் குமாரை 96002 44634 என்ற எண்ணிலும், [email protected] என்ற இணையத்தள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.