கோவை: வால்பாறை அருகே வில்லோனி டாப் பகுதியில் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால், அந்த வழியாக மாநகரப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது வில்லோனி டாப் எஸ்டேட் இங்கு 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வால்பாறை சோலையார் அணை சாலையில் வரட்டுப்பாறை முதல் வில்லோனி எஸ்டேட் சாலை வரை டாடா நிறுவனத்திடமிருந்து நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி நிர்வாகத்தால் அந்த சாலை புதுப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், புதுப்பிக்கப்பட்ட சாலையில் வில்லோனி டாப் அருகே கட்டப்பட்ட பாலத்திற்கும் சாலைக்கும் இடையே பள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் இயக்க சிரமப்பட்டு வந்தன. தற்போது, பள்ளம் பெரிதான காரணத்தால் வாகனங்கள் செல்ல இயலாததால் அரசு பேருந்து இயக்கம் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வில்லோனி டாப் பகுதி மக்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சாலையையும் பாலத்தையும் இணைத்து உடனடியாக சீரமைக்க நகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.