கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி..! தமிழக கேரளா எல்லையில் பேருந்துகளில் மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து விழிப்புணர்வு!

கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியவர்கள் சிகிச்சைகள் பெற்று வரும் நிலையில், தமிழக சுகாதாரத் துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் மருத்துவ குழுவினர் விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியவர்கள் சிகிச்சைகள் பெற்று வரும் நிலையில், தமிழக சுகாதாரத் துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் மருத்துவ குழுவினர் விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொடும் வைரஸ்களால் பரவும் நோய்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறுபட்ட வைரஸ்கள் காலத்திற்கு ஏற்ப பரவி பல்வேறு உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் மூலம் நோய் தொற்று ஏற்பட்டு பலர் பலியாகி விட்டனர். மேலும் பலர் நோய் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த நோய் தொற்றானது பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த நோயானது கேரளா மருத்துவ மாணவிக்கு வந்தது. பின்னர் அடுத்தடுத்து என கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் அதன் அறிகுறி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக கேரள எல்லையான வாளையார் பகுதியில் காய்ச்சல் மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த விழிப்புணர்வு முகாமானது சுகாதாரத்துறை இயக்குனர் ரமேஷ் குமார் உத்தரவின் பேரில் மருத்துவர் ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவ குழுவினர் கேரளாவில் இருந்து கோவை நோக்கி வரும் வாகனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதேபோல, இவர்கள் பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்ளை நிறுத்தி அதில் பயணிப்பவர்களுக்கு நோயின் தன்மை குறித்தும் தடுப்பு நடவடிக்கை குறித்தும் விளக்கி வருகின்றனர்.

மேலும் கொரோனா வைரஸ் குறித்த அச்சம், பீதி பொதுமக்களுக்கு இருக்கும் வரை தினமும் இது போன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்த சுகாதாரத்துறை மருத்துவர்கள் தினமும் 10 முதல் 15 முறையாவது கைகளை நன்கு தூய்மையாக கழுவினால் நோய் தொற்றுகளில் இருந்து தப்பிக்கலாம் என தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...