வீடியோ: கோவையில் குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு பேரணியில் 108 ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்தி கொடுத்த அதிவிரைவு படையினர்..!

கோவை: கோவையில் நேற்று குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியின் போது நோயாளியை அவசரமாக அழைத்துச் சென்று கொண்டிருந்த 108 ஆம்புலன்சுக்கு மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின்படி ஆணையாளரின் அதிவிரைவு படையினர் வழி ஏற்படுத்திக் கொடுத்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பாராட்டுகளை பெற்றுள்ளது.


கோவை: கோவையில் நேற்று குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியின் போது நோயாளியை அவசரமாக அழைத்துச் சென்று கொண்டிருந்த 108 ஆம்புலன்சுக்கு மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின்படி ஆணையாளரின் அதிவிரைவு படையினர் வழி ஏற்படுத்திக் கொடுத்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 2ம் தேதியான நேற்று கோவையில் தேசம் காக்கும் ஒற்றுமை பேரணி நடத்தப்பட உள்ளதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதன்படி நேற்று உக்கடம் பகுதியில் இருந்து இந்த பேரணி துவங்கியது. இந்தப் பேரணியில் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள், ஜமாத்தினர், பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியின் போது பாதுகாப்புப் பணிக்காக மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, 108 ஆம்புலன்ஸ் அவசரம் அவசரமாக நோயாளியை அழைத்து கொண்டு கோவை அரசு மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது, டவுன்ஹால் அருகே 108 ஆம்புலன்ஸ் செல்ல வழி இல்லாமல் அடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்ட மாநகர காவல் ஆணையாளர் தனது அதிவிரைவு படையினரை அனுப்பி போக்குவரத்தை சரி செய்து 108 ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...