திருப்பூர் மாவட்டம் அழகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று கோலாகல துவக்கம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அழகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று கோலாகலமாக துவக்கப்பட்டது. 800 காளைகள் 600 காளையர்கள் பங்கேற்ற இந்த போட்டியினை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று, பிப்., 2 ஆம் தேதி துவங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அழகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று கோலாகலமாக துவக்கப்பட்டது.  800 காளைகள் 600 காளையர்கள் பங்கேற்ற இந்த போட்டியினை மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று, பிப்., 2 ஆம் தேதி துவங்கி வைத்தார்.



திருப்பூர் மாவட்டம் அழகு மலையில் அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கியது. இந்த போட்டியில் 800 காளைகள் மற்றும் 600 காளையர்கள் பங்கேற்பதற்கு முன் பதிவு செய்துள்ளனர். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும்படி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.



மேலும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சிகிச்சை அளிக்க ஐந்து பேர்கொண்ட 7 மருத்துவ குழுக்களும் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இருசக்கர வாகனம் குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளது. 



கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்ட பின்னர் பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. இதில் மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக காளையை அடக்கி வருகின்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் சரியாக செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவ வசதிகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...