இந்தியன் வங்கியுடன் இணைகிறது அலகாபாத் வங்கி..! வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் - இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் பத்மஜா சந்துரு

கோவை: இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐடிஎப்), ஜவுளி தொழில் சங்கம், 673 ஜவுளி தொழிலில் பல்வேறு உற்பத்தியாளர்களை உறுப்பினர்களாகவும் பங்குதாரர்களாகவும் கொண்டுள்ளது. ஜவுளி தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிக்க ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

கோவை: இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐடிஎப்), ஜவுளி தொழில் சங்கம், 673 ஜவுளி தொழிலில் பல்வேறு உற்பத்தியாளர்களை உறுப்பினர்களாகவும் பங்குதாரர்களாகவும் கொண்டுள்ளது. ஜவுளி தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிக்க ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பும், பிக்கியும் இணைந்து நடத்தும் நிகழ்ச்சி:

ஜவுளி தொழில் வளர்ச்சியில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போது மாறி வரும் வணிக சூழலில், புதிய ஒழுங்குமுறைகள் உள்ள நிலையில், வங்கிகளின் மேலாண்மை உயர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது. புதிய ஆலோசனைகளையும் தீர்வுகளையும் காண வேண்டியுள்ளது.

பொது துறை வங்கிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் வங்கிகளுடன், குறிப்பாக ஜவுளி தொழிலில் தொடர்புடைய வங்கிகளில் முதலாவதாக இந்தியன் வங்கியுடன் இந்த நிகழ்ச்சி முதல் முறையாக தொடங்கியுள்ளது. இந்திய டெக்ஸ்பினர்ஸ் கூட்டமைப்பை சேர்ந்த 110 ஜவுளி தொழிலில் ஸ்பின்னிங், வீவிங் மற்றும் அப்பேரல் பிரிவை சேர்ந்த தொழில் முனைவோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பத்மஜா சந்துருவுடன் நடந்த கலந்துரையாடலில், ஜவுளி துறையில் உள்ள தேவைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டன. அவர், இந்தியன் வங்கி இந்த துறைக்கு பல்வேறு வகையில் உதவி செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். கோவை மண்டலத்தில் உள்ள இந்தியன் வங்கி, பல ஆண்டுகளாக ஜவுளி தொழில் முனைவோருக்கு உதவி செய்து வந்துள்ளது. சென்னை இந்தியன் வங்கியின் எம்எஸ்எம்இ கார்ப்பேரட் பிரிவு பொது மேலாளர் கே.எஸ் சுதாகர் ராவ் மற்றும் கோவை கள பொது மேலாளர் ஜபியா பரிட் ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

இந்த கலந்துரையாடலின் போது, ஜவுளி தொழிலில் உள்ள வர்த்தக சூழல், பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் வங்கியானது, கார்பரேட் லோன் என்ற நடைமுறை மூலதனக் கடன் திட்டத்தையும், சூரிய சக்தி / ஐபி சோலார் என்ற சூரிய ஒளி கூரை அமைப்புக்கான கடன் திட்டத்தையும் கொண்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மரபுசாரா எரிசக்தியை, சொந்த பயன்பாட்டுக்கு உற்பத்தி செய்ய இந்த கடனுதவி உதவுகிறது. இந்த கடனுதவி நாடு முழுவதும் அமைந்துள்ள அனைத்து கிளைகளிலும் கிடைக்கும். இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், வங்கியின் இந்த திட்டத்தை அறிந்து, மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இது, ஜவுளி தொழில் முனைவோரின் சிக்கலை தீர்க்க உதவும் என தெரிவித்தனர்.

இந்தியன் வங்கி, நாட்டின் சேவையில் 113 ஆண்டுகளாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. 9907 கிளைகளை கொண்டுள்ளது. 52 மில்லியன் வாடிக்கையாளர்களையும், கடந்த 2019 டிசம்பர் 31 கால அளவின்படி, 4.5 டிரில்லியன் வணிகத்தையும் கொண்டுள்ளது. கடந்த 2019–20 நிதியாண்டின் காலிறுதி ஆண்டில் 12% வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி இணைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது கூடுதலான வாடிக்கையாளர்களை பெற்று தருவதுடன், வங்கியின் பல்வேறு செயல்பாடுகளையும் சிறப்புடையதாக மாற்றும். இந்த இணைப்பு, வரும் 2020 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து நாட்டின் 7வது பெரிய வங்கியாக இந்தியன் வங்கி மாறும். இதன் வணிகம், 8.50 லட்சம் கோடியாக உயரும்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பத்மஜா சந்துரு, இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு ஸ்ரீஹரி பாலகிருஷ்ணன், இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு பிரபு தாமோதரன், தனபால், இந்தியன் வங்கியின் சார்பில் சுதாகர் ராவ், திருமதி ஜபியா பரீட், பிக்கி ஸ்ரீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...