கொரோனா வைரஸ் தாக்கம்..! சீனாவில் இந்தியர்களுக்கு உணவு தட்டுப்பாடு - சீனாவில் இருந்து கோவை திரும்பிய மாணவி தகவல்!

கோவை: கொரானோ வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் உள்ள இந்தியர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் நோய் தொற்று பாதுகாப்பிற்காக வழங்கப்படும் மாஸ்க் கூட இல்லாமல் இருப்பதாக சீனாவிலிருந்து இந்தியா திரும்பியுள்ள அன்னூர் மருத்துவ மாணவி தெரிவித்துள்ளார்.

கோவை: கொரானோ வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் உள்ள இந்தியர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் நோய் தொற்று பாதுகாப்பிற்காக வழங்கப்படும் மாஸ்க் கூட இல்லாமல் இருப்பதாக சீனாவிலிருந்து இந்தியா திரும்பியுள்ள அன்னூர் மருத்துவ மாணவி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த சகோதரிகள் அனுஸ்ரீ மற்றும் அபிநயா ஸ்ரீ. இவர்கள் சீனாவில் உள்ள சாங்கி சீ புரோவின்ஸ் சியான் மாகாணத்தில் மருத்துவம் பயின்று வந்தார். இவருடன் முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சீயான் தாங் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நிலையில், தற்போது அங்கு வேகமாக கொரானோ வைரஸ் பரவிவருவதால் அங்கு படித்த பெரும்பாலான மாணவர்கள் அங்கிருந்து இந்தியா வர மிகவும் சிரமப்பட்டு வந்ததாக கூறினார்.

இதுவரை இல்லாத வகையில் விமான சேவை அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டதால் தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறிய மாணவி அனுஸ்ரீ, தனது தந்தையின் முயற்சியால் தற்போது இந்தியா வந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அங்கு தங்கியிருந்த போது கொரானோ வைரஸ் காரணமாக தெருக்களே வெறிச்சோடியதாகவும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, பொருட்களை வாங்க கடைகள் ஏதும் செயல்படாததால் உணவு தட்டுப்பாடு என்பது கடுமையான இருந்ததாக கூறினார். அத்துடன் கொரானோ வைரஸ் தடுக்க என் 95 மற்றும் சர்ஜிக்கல் மாஸ்க் ஆகியவை கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் பெரும்பாலான மருந்து கடைகளில் தற்போது ஸ்டாக் இல்லாமல் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக தெரிவித்தார்

தற்போது சீனாவில் இருந்து மலேசியா வழியாக திருச்சி வந்து கோவை வந்ததாக கூறிய மாணவிகள், விமான நிலையத்தில் வந்த போது தங்களை பரிசோதனை செய்து நோய் குறித்து எந்த அறிகுறியும் இல்லாததால் வீட்டிற்கு அனுப்பிவைத்ததாக தெரிவித்தனர்.

Newsletter

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...