கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவாரி ஆலயத்தில் ரத சப்தமியை முன்னிட்டு தங்கதேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரத சப்தமியை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மலையப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சூரிய பிரபை வாகனம், அன்ன பஷிவாகனம், சேஷ வாகனம், அனுமந்த வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதனை தொடர்ந்து, மதியம் ஒரு மணிக்கு மலையப்பசாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் தங்க தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து தங்கதேரில் மலையப்பசாமி திருவீதி உலா நடைபெற்றது. மேளதாளங்களுடன் வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க தங்க தேரானது நான்கு மாட வீதிகளின் வழியே வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

அப்போது, பெண்கள் தட்டில் அவல், பூ, பழங்கள், இனிப்புகள் வைத்து மலையப்பசாமிக்கு படைத்து ஆழத்தி எடுத்து வரவேற்றனர். இந்த தங்க தேர் வைபவ நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.