உள்ளாட்சி துறையின்‌ சார்பில்‌ திட்டப்பணிகளை சிறப்பாக நிறைவேற்றி 107 விருதுகளை பெற்று சாதனை - அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி!

கோவை: தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ உள்ளாட்சி துறையின்‌ சார்பில்‌ திட்டப்பணிகளை சிறப்பாக நிறைவேற்றி இதுவரை 107 விருதுகளை பெற்று சாதனை புரிந்துள்ளதாக, நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ துறையின்‌ சார்பில்‌ நகர்ப்புறப்‌ பகுதிகளில்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ பல்வேறு திட்டப்பணிகளின்‌ முன்னேற்ற நிலை குறித்த மாநில அளவிலான பணி ஆய்வுக்கூட்டத்தில்‌ அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி தெரிவித்தார்‌.

கோவை: தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ உள்ளாட்சி துறையின்‌ சார்பில்‌ திட்டப்பணிகளை சிறப்பாக நிறைவேற்றி இதுவரை 107 விருதுகளை பெற்று சாதனை புரிந்துள்ளதாக, நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ துறையின்‌ சார்பில்‌ நகர்ப்புறப்‌ பகுதிகளில்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ பல்வேறு திட்டப்பணிகளின்‌ முன்னேற்ற நிலை குறித்த மாநில அளவிலான பணி ஆய்வுக்கூட்டத்தில்‌ அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி தெரிவித்தார்‌.

நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்பு திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ தலைமையில்‌ நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ துறையின்‌ சார்பில்‌ பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள்‌, நகராட்சிகள்‌, பேரூராட்சிகள்‌, சென்னைப்‌ பெருநகர்‌ குடிநீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்று வாரியம்‌ மற்றும்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியம்‌ சார்பாக நகர்ப்புறப்‌ பகுதிகளில்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ பல்வேறு திட்டப்பணிகளின்‌ முன்னேற்ற நிலை குறித்த மாநில அளவிலான பணி ஆய்வுக்கூட்டம்‌ நேற்று (28.01.2020) ரிப்பன்‌ மாளிகையில்‌ உள்ள அம்மா மாளிகை கலையரங்கில்‌ நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத் திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ அடிப்படை தேவைகளான குடிநீர்‌, மின்விளக்குகள்‌, சாலைகள்‌ அமைக்கும்‌ பணிகள்‌, திடக்கழிவு மேலாண்மை, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ ஒழிப்பு மற்றும்‌ தொற்றுநோய்‌ ஒழிப்பு போன்ற பணிகள்‌ குறித்தும்‌, அம்ரூத்‌ திட்டம்‌, சீர்மிகு நகரத்‌ திட்டம்‌ மற்றும்‌ பல்வேறு பன்னாட்டு வங்கிகளின்‌ நிதியுதவியுடன்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ சிறப்பு திட்டங்கள்‌ குறித்தும்‌ இக்கூட்டத்தில்‌ அமைச்சர்‌ அவர்கள்‌ சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம்‌ விரிவாக கேட்டறிந்தார்‌.

குறிப்பாக, சீர்மிகு நகரத்‌ திட்டத்தில்‌ அனுமதிக்கப்பட்ட 440 திட்டங்களில்‌ முடிவுற்ற திட்டங்களைத்‌ தவிர்த்து, ரூ.6,197 கோடியில்‌ நடைபெற்று வரும்‌ 216 திட்டங்கள்‌ குறித்தும்‌, ரூ.512 கோடி மதிப்பில்‌ ஒப்பந்தப்புள்ளிகள்‌ சீராய்வு நிலையில்‌ உள்ள 11 பணிகள்‌ குறித்தும்‌, ரூ.1,194 கோடி மதிப்பில்‌ ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள 62 திட்டங்கள்‌ குறித்தும்‌, ரூ.49 கோடியில்‌ ஒப்பந்தப்புள்ளி கோரப்பட வேண்டிய 4 திட்டங்கள்‌ குறித்தும்‌, ரூ.856 கோடியில்‌ திட்ட அறிக்கை கூராய்வு நிலையில்‌ உள்ள 10 திட்டங்கள்‌ குறித்தும்‌, ரூ.1,242 கோடி மதிப்பீட்டில்‌ திட்ட அறிக்கை தயார்‌ செய்யப்பட்டுள்ள 58 திட்டங்கள்‌ குறித்தும்‌ அமைச்சர்‌ அவர்கள்‌ விரிவாக கேட்டறிந்தார்‌. மேலும்‌, தற்பொழுது சீர்மிகு நகரத்‌ திட்ட செயலாக்கத்தில்‌ தமிழகம்‌ 146.2 புள்ளிகளுடன்‌ இந்திய அளவில்‌ 8வது இடத்தில்‌ உள்ளது. இப்பணிகளை மேற்கொண்ட அலுவலர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்‌ கொள்வதாகவும்‌, மேலும்‌, மீதமுள்ள பணிகளை விரைந்து செயல்படுத்தி முதலிடத்தை அடையும்‌ அளவிற்கு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்‌ எனவும்‌ அமைச்சர்‌ அவர்கள்‌ தெரிவித்தார்‌.

இதேபோன்று அம்ரூத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.11,441 கோடி மதிப்பில்‌ அனுமதிக்கப்பட்ட 445 திட்டப்பணிகளில்‌ முடிக்கப்பட்ட 415 திட்டங்களை தவிர்த்து மீதம்‌ நடைபெற்று வரும்‌ பணிகள்‌ குறித்து கேட்டறிந்தார்‌. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி நீங்கலாக மீதமுள்ள 14 மாநகராட்சிகள்‌, 12 நகராட்சிகள்‌ மற்றும்‌ 1 பேரூராட்சியில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ அம்ரூத்‌ திட்டப்பணிகள்‌ குறித்து கேட்டறிந்தார்‌.

தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியத்தில்‌ அம்ரூத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ இராமேஸ்வரம்‌ நகராட்சி, ஆம்பூர்‌ நகராட்சியில்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌, கோவை மாநகராட்சி, குறிச்சி மற்றும்‌ குனியமுத்தூர்‌ பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டப்பணி, திருச்சி மாவட்டத்தில்‌ 293 ஊரக குடியிருப்புகளுக்கான பெரிய கூட்டு குடிநீர்‌ திட்டப்பணி, நாமக்கல்‌ மற்றும்‌ சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள 669 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர்‌ திட்டப்பணி, திண்டுக்கல்‌-ஒட்டன்சத்திரம்‌ ஊராட்சி ஒன்றியத்திற்கான குடிநீர்‌ திட்டப்பணி, திருச்சி மாவட்டம்‌ வையம்பட்டி மற்றும்‌ மருங்காபுரி ஒன்றியங்களுக்கான கூட்டு குடிநீர்‌ திட்டப்பணி ஆகியவற்றின்‌ தற்போதை நிலை குறித்தும்‌, பணிகளை விரைந்து முடித்திடவும்‌ அலுவலர்களுக்கு அமைச்சர்‌ அவர்கள்‌ உத்தரவிட்டார்‌.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...