மேட்டுப்பாளையத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு பேருந்து நிலையத்தை சுத்தம் செய்து தூய்மை விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்!

கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் மெட்ரோ தனியார் பள்ளி சார்பில் இன்று குடியரசு தினவிழாவினை முன்னிட்டு சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தும் விதமாக பள்ளி மாணவ மாணவிகள் பேருந்து நிலையங்களை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் மெட்ரோ தனியார் பள்ளி சார்பில் இன்று குடியரசு தினவிழாவினை முன்னிட்டு சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தும் விதமாக பள்ளி மாணவ மாணவிகள் பேருந்து நிலையங்களை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், அம்மா உணவகம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியிருந்த குப்பைகளை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒருங்கிணைத்து குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். மேலும், பொதுமக்கள் முன்னிலையில் சேகரம் செய்து எடுக்கப்பட்ட குப்பைகளை அங்கிருந்து துப்புரவுப் பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தினர். 



மேலும், மனித குலத்திற்கு நோயினை அதிகரிக்க செய்யும் சுகாதார சீர்கேட்டினை போக்க சுற்றுப் புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் எனவும் அதற்கு பொதுமக்களாகிய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை மாணவ மாணவிகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் நாகராஜ், பள்ளி முதல்வர் சுலோக்சனா மற்றும் ஆசிரியர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...