கோவையில் பொங்கல் விழாவில் முன்விரோதம் காரணமாக நடந்த கத்திக்குத்தில் இளைஞர் பலி; ஒருவர் கைது - இருவருக்கு போலீசார் வலைவீச்சு

கோவை: கோவை அடுத்த ராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட அம்மன் குளம் பகுதியில் பொங்கல் விழாவில் ஏற்பட்ட விரோதத்தில் இளைஞர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை அடுத்த ராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட அம்மன் குளம் பகுதியில் பொங்கல் விழாவில் ஏற்பட்ட விரோதத்தில் இளைஞர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த மூன்று நாட்களாக பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதேபோல, கோவை புலியகுளம் அருகேயுள்ள அம்மன் குளம் பகுதியில் பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றாக கபடி போட்டிகளும் நடைபெற்றது. 

இந்த போட்டியில் அம்மன் குளம் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் மூன்று வெளியூர் கபடி வீரர்களை வைத்து கபடி போட்டியில் விளையாடி உள்ளார். இதனால் உள்ளூர் குழுவினருடன் வாக்குவாதம் மூண்டுள்ளது.

இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு தொக்கி என்ற விஜயகுமார், அவரது தம்பி கள்ளி என்ற கண்ணன் மற்றும் மற்றொரு நபர் என சேர்ந்து நவீன் குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தினர். அப்போது, விஜயகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆத்திரத்தில் நவீனை சரமாரியாக குத்தி தப்பிச் சென்றார்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் நவீன்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். இதை தொடர்ந்து டி-1 ராமநாதபுரம் போலீசார் நவீன்குமார் மரணம் தொடர்பாக கொலை வழக்காக பதிவு செய்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான உதவி ஆய்வாளர் ஜெசிஸ் உதயகுமார், தலைமைக் காவலர்கள் ஆனந்த் குமார், வேலுமயில், சத்தியமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் முக்கிய குற்றவாளியான தொக்கி என்ற விஜயகுமாரை கைது செய்தனர். மேலும், விஜயகுமாரின் சகோதரர் கண்ணன் மற்றும் மற்றொரு நபரை போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...