கோவை: கோவை அடுத்த பீளமேடு காவல் எல்லைக்குட்பட்ட ஹோப்காலேஜ் ரயில்வே தண்டவாளம் அருகே காலைக்கடன் கழிக்கச் சென்ற முதியவர் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அடுத்த பீளமேடு காவல் எல்லைக்குட்பட்ட ஹோப்காலேஜ் ரயில்வே தண்டவாளம் அருகே காலைக்கடன் கழிக்கச் சென்ற முதியவர் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீளமேடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சுகுமார் (67). இவர் வழக்கமாக ஹோப் காலேஜ் ரயில்வே தண்டவாளம் அருகே காலைக்கடன் கழிக்க செல்வது வழக்கம். இந்த நிலையில், இன்று வழக்கம்போல சென்ற போது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பீளமேடு காவல்துறைக்கும், ரயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.