கோவை: அயோத்தி-பாபர் மசூதி தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் பதட்டமான பகுதிகளில் அதிவிரைவு படை போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தியில் அயோத்தி - பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறை இயக்குனர் திரிபாதி உத்தரவின் பேரில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல ஏற்கனவே அனைத்து காவல் எல்லைகளிலும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக இரு தரப்பினர் மத்தியிலும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாநகர காவல் எல்லை மற்றும் மாவட்ட காவல் எல்லைப் பகுதிகளில் தீர்ப்பு வர உள்ளது என்கிற அறிவிப்பு வெளியானதிலிருந்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கோவை மாநகர பகுதியில் ஏடிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் 2800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல 200க்கும் மேற்பட்ட (Rapid action force) அதிவிரைவு படையினர் ஆயுதம் ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக கோவையில் மிகவும் பதட்டமான பகுதி என மாநகர போலீசார் பரிந்துரை அளித்த ஆத்துப்பாலம், குனியமுத்தூர், கரும்புக்கடை, காந்திபுரம், உக்கடம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.