கோவையில் பெட்ரோல் பங்கிற்கு உரிமம் வாங்குவது தொடர்பான விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக, கோவை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கோவை: கோவையில் பெட்ரோல் பங்கிற்கு உரிமம் வாங்குவது தொடர்பான விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக, கோவை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள தெற்கு தீயணைப்பு துறை அலுவலகத்தில் மாவட்ட அலுவலர், மற்றும் இணை இயக்குனர் அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்தின் கீழ் கோவை தெற்கு உட்பட வடக்கு, கணபதி ,பீளமேடு, பொள்ளாச்சி ,வால்பாறை, மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர், மற்றும் கிணத்துக்கடவு என 10 நிலையங்கள் உள்ளது.
இந்த பத்து நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தீயணைப்பு எல்லைக்குள் வரும் அனைத்து பிரிவுகளுக்கும் முறையான அனுமதிகள் மாவட்ட அலுவலரிடம் பெறவேண்டும்.
இப்படியிருக்க, மாவட்ட அலுவலர் பாலசுப்ரமணியம் பெட்ரோல் பங்கிற்கான அனுமதிக்கு ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலதண்டாயுதபாணி என்பவரிடம் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதையடுத்து, பாலதண்டாயுதபாணி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர், அவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் கோவை தெற்கு தீயணைப்பு அலுவலகத்தில் வைத்து மாவட்ட அலுவலரிடம் ரசாயனம் தடவிய பணத்தை வெள்ளிக்கிழமை (நேற்று) கொடுத்தார்.
இந்த நிலையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மாவட்ட அலுவலரை கையும் களவுமாக பிடித்தனர். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணியத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தீயணைப்புத் துறை அலுவலகத்தில் மாவட்ட அலுவலர் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.