கோவை: திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்திட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு கள் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய நல்லசாமி, மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திருத்தங்களை செய்யாமலே தேர்தல் நடைபெறுவதாகவும் அதை திருத்திய பிறகே உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டுமெனவும் உள்ளாட்சித் தேர்தலில் கொள்கை முடிவுகள் எதுவும் எடுப்பதில்லை என்றும் தேர்தலில் சிற்றூராட்சி உறுப்பினர் முதல் மாநகராட்சி மேயர் பதவி வரை சுயேட்சை சின்னங்களை கொண்டே தேர்தல் நடைபெற வேண்டும் என்றார்.
1967க்கு பிறகு உள்ளாட்சிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட ஆரம்பக்கல்வி, ஆரம்ப சுகாதாரம், கால்நடை மேம்பாடு, வேளாண்மை துறைகள் மீண்டும் உள்ளாட்சிகளிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அப்போது தான் ஒவ்வொரு உள்ளாட்சியும் ஒரு தன்னிறைவு பெற்ற குடியரசாக இருக்கும் என்று கூறினார்.
மேலும், கள் ஒரு போதை அல்ல அது ஒரு உணவு என்றும் கள் இறக்குவதும் அருந்துவதும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு அளித்துள்ள உரிமை, ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கள் இறக்குவதற்குத் தடை உள்ளது என்றும் அந்த தடையை அரசு எடுக்க வேண்டும் என்னாகும் இல்லையெனில் 2020 ஜனவரி 21ம் தேதி முதல் கள் இறக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று தெரிவித்தார்.
இந்தியாவில் விளையும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற எந்த எண்ணெய்க்கும் அரசு மானியம் வழங்காமலும் அவற்றை ரேசன் கடைகளிலும் விநியோகம் செய்வதில்லை என்று தெரிவித்த அவர், பல நாடுகளில் பெட்ரோலுடன் 85% எத்தனாலை கலந்து வாகனங்களுக்கு எரிபொருளாக இயக்குவது நடைமுறையில் உள்ளது என்றும் இந்தியாவில் மிக குறைந்த அளவே எத்தனால் பெட்ரோலுடன் கலந்து வாகனத்திற்கு எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது இது மாறினால் நன்மை பயக்கும் என்று அவர் தெரிவித்தார்.