அஜினோமோட்டோவின் (MSG) உணவுமுறை மற்றும் ஊட்டச்சத்து ஆதாயங்கள் குறித்து விளக்கமளித்த புகழ்பெற்ற உணவுமுறை நிபுணர்

கோவை: கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய புகழ்பெற்ற உணவுமுறை நிபுணரும், ஆலோசகருமான டாக்டர் தாரிணி கிருஷ்ணன், அஜினோமோட்டோவின் (எம்எஸ்ஜி) ஊட்டச்சத்து ஆதாயங்கள் குறித்து விளக்கத்தை வழங்கினார். அத்துடன், கரும்பு மற்றும் காளான்கள் போன்ற இயற்கை பயிர்களிலிருந்து அது எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்றும் அவர் விளக்கினார்.

கோவை: கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய புகழ்பெற்ற உணவுமுறை நிபுணரும், ஆலோசகருமான டாக்டர் தாரிணி கிருஷ்ணன், அஜினோமோட்டோவின் (எம்எஸ்ஜி) ஊட்டச்சத்து ஆதாயங்கள் குறித்து விளக்கத்தை வழங்கினார். அத்துடன், கரும்பு மற்றும் காளான்கள் போன்ற இயற்கை பயிர்களிலிருந்து அது எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்றும் அவர் விளக்கினார்.

அஜினோமோட்டோ குழுமம் என்பது, உயர்தர சீசனிங் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை தயாரித்து, சந்தையாக்கல் செய்து வரும் ஒரு உலகளாவிய பெருநிறுவனமாகும். 1909ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனம் தற்போது 27 நாடுகளில் இயங்கி வருகிறது. உணவுக்கு உமாமி சுவையை தருகிற உட்பொருளான மோனோசோடியம் குளூட்டாமேட் (எம்எஸ்ஜி), இப்போது உலகில் மிகவும் பிரபலமான சமையலுக்கான உட்பொருளாக திகழ்கிறது. 130-க்கும் அதிகமான நாடுகளில் உலகெங்கும் இது தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



இதுகுறித்து அஜினோமோட்டோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அட்சுஷி மிஷ{கு (Atsushi Mishuku) பேசுகையில்:-

கரும்புச்சாறு, சோளம், மரவள்ளிக்கிழங்கு போன்ற இயற்கை தாவர பொருட்களிலிருந்து அஜினோமோட்டோ பெறப்படுகிறது. நாங்கள் இயக்கி வருகின்ற வெவ்வேறு பூகோள பகுதிகளிலிருந்து எம்எஸ்ஜியை தயாரிப்பதற்காக அந்தந்த இடங்களில் மிக அதிகமாக கிடைக்கின்ற தாவரப் பொருட்களை பயன்படுத்துகிறோம். வர்த்தக ரீதியில் எம்எஸ்ஜியை தயாரித்த உலகின் முதல் நிறுவனம் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று கூறினார்.

எம்எஸ்ஜி மீது நிலவி வருகின்ற தவறான கண்ணோட்டம் குறித்து விளக்கமளித்த அவர், ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதலோ, அனுமதியோ இல்லாமல் சீனாவிலிருந்து தயாரித்து சந்தைக்கு அனுப்பப்படுகின்ற போலி தயாரிப்புகளே ஆபத்தானவை என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில், அஜினோமோட்டோ இந்தியா நிறுவனத்தின் மேலாளர் – சந்தையாக்கல் கோவிந்த பிஸ்வாஸ் பேசுகையில்:-

உணவின் அற்புதமான சுவையை அஜினோமோட்டோ இன்னும் அதிகரிக்கிறது. கரும்பு மற்றும் மரவள்ளிக்கிழங்கு போன்ற நேர்த்தியான, தரம் வாய்ந்த தாவர பயிர்களிலிருந்து மதிப்பு செயல்முறை வழியாக இது தயாரிக்கப்படுகிறது. அஜினோமோட்டோ குறித்து நிலவுகின்ற தவறான கண்ணோட்டத்தை உரிய விளக்கமளித்து நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொண்டு வந்திருக்கிறோம் என்று கூறினார்.



அஜினோமோட்டோ (எம்எஸ்ஜி) – ல் அடங்கியுள்ள கூறுகளான குளூட்டாமேட், சோடியம் மற்றும் நீர் ஆகியவை குறித்து விரிவாக விளக்கமளித்த உணவுமுறை வல்லுனர் டாக்டர் தாரிணி கிருஷ்ணன், மோனோசோடியம் குளூட்டாமேட் என்பது, மனிதர்கள் உட்கொள்வதற்கு மிகவும் பாதுகாப்பானது. பெண்களின் தாய்ப்பாலில் காணப்படுகின்ற குளூட்டாமேட் அமிலம் என்பது வேறொன்று. அதுவும் மிகவும் பாதுகாப்பானதே. மோனோசோடியம் குளூட்டாமேட் இயற்கை தாவர விளைபொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.



அஜினோமோட்டோ (எம்எஸ்ஜி) பயன்படுத்துவதனால் ஏற்படும் ஆதாயப்பலன்கள் என்ன என்பதையும் அவர் விளக்கமளித்து வலியுறுத்தினார். அவரது ஆய்வு கண்டறிதலின்படி நாம் தயாரிக்கும் உணவுகளில் உப்பின் அளவை நாம் குறைப்போம் என்றால், உணவின் ஒட்டுமொத்த சுவையும் குறைந்துவிடும். ஆனால், எம்எஸ்ஜியை பயன்படுத்தும்போது அது உணவின் சுவையை உயர்த்தி மேம்படுத்துவதோடு, அதே நேரத்தில் உப்பின் நுகர்வு அளவை 30 சதவிகிதம் வரை குறைக்கிறது என்று கூறினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...