சாலையில் மயங்கிய மூதாட்டி; தூக்கி சென்று மருத்துவமனைக்கு அனுப்பிய போக்குவரத்து காவலருக்கு குவியும் பாராட்டு

கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லையில் இருசக்கர வாகனத்தில் தனது உறவினருடன் சென்று கொண்டிருந்த மூதாட்டி திடீரென மயங்கியதையடுத்து, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் ஒருவர் மூதாட்டியை கையில் தூக்கிச் சென்று ஆட்டோவில் வைத்து மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.


கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லையில் இருசக்கர வாகனத்தில் தனது உறவினருடன் சென்று கொண்டிருந்த மூதாட்டி திடீரென மயங்கியதையடுத்து, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் ஒருவர் மூதாட்டியை கையில் தூக்கிச் சென்று ஆட்டோவில் வைத்து மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் சண்முகசுந்தரம். இவர் இன்று வழக்கம்போல சிங்காநல்லூர் முக்கிய சாலையில் போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் தனது உறவினருடன் வந்து கொண்டிருந்த மூதாட்டி, சிங்காநல்லூர் சிக்னல் அருகே திடீரென மயக்கம் அடைந்தார். இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த உறவினர் நிலை தடுமாறி நின்றார். அப்போது இதைக்கண்ட போக்குவரத்து தலைமை காவலர் சண்முகசுந்தரம் மயங்கிய நிலையில் இருந்த மூதாட்டியைத் தூக்கிச் சென்று ஆட்டோவில் வைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்வை சாலையில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். பணியில் இருந்த காவலர் ஒருவர் மயக்கமடைந்த மூதாட்டியை மனிதநேயத்துடன் தூக்கிச்சென்று மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவம் அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...