திருப்பூர்: திருப்பூரில் உள்ள சந்தைகளில் பெரிய வெங்காயம் பதுக்கப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், வியாபாரிகள் யாரேனும் வெங்காயத்தை அதிக அளவில் பதுக்கி வைத்து வியாபாரம் செய்கின்றனரா என அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் தென்னம்பாளையும் பகுதி மார்க்கெட்டில் வட்டார வழங்கல் அலுவலர் முருகன் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வியாபாரிகள் அதிகபட்சம் 10 டன் அளவிற்கு வெங்காயம் வியாபாரத்திற்கு வைத்துக் கொள்ளலாம் எனவும் அதற்கு மேலுள்ள வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர். திருப்பூரில் உள்ள சந்தையில் வெங்காயம் கிலோ 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.