பக்கவாதம் வந்த 4 மணி நேரத்திற்குள் அரசு மருத்துவமனைக்கு வந்தால் குணமடையலாம் - கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

கோவை: கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களுக்கு பக்கவாதம் (ஸ்ட்ரோக்) குறித்த விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.


கோவை: கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களுக்கு பக்கவாதம் (ஸ்ட்ரோக்) குறித்த விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.

பக்கவாத நோயானது மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் அடைப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுவதால் உண்டாகிறது. மேலும், இந்த நோய் உருவாக உயர் இரத்த அழுத்தம், சக்கரை நோய், புகைப்பிடித்தல் போன்றவை காரணியாக உள்ளது. இந்த பக்கவாத நோய் ஏற்படும் போது, ஒரு பக்கம் கை கால் செயலிழத்தல், முகம் கோணலாக மாறுவது, திடீரென்று நடப்பதில் தடுமாற்றம், பேச்சு திணறுதல் ஆகியவை அறிகுறிகளாக உள்ளன.

மேலும், இந்த பக்கவாத விழிப்புணர்வு பொதுமக்களிடையே குறைவாக உள்ளதால், இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல, பக்கவாதத்தினால் ஒரு நோயாளி பாதிக்கப்பட்டதில் இருந்து நான்கரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்தடைந்தால் உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு நலம் பெறலாம்.



எனவே, யாருக்கேனும் பக்கவாதம் தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும். அதேபோல குறிப்பிட்ட நேரத்திற்குள் வருபவர்களுக்கு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிறப்பு சிகிச்சைகள் மூலம் நோயிலிருந்து குணமடையலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அசோகன் கூறும்போது ;-







கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் கீழ் உள்ள 13 மருத்துவமனைகளில் பக்கவாதம் பாதிப்பினால் உள்ள நோயாளிகள் உடனடியாக கோவை அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு நோயாளியை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கும் பொழுது, இங்கு தயாராக இருக்கும் மருத்துவ குழுவினர் உடனடி சிகிச்சை அளிப்பார்கள். இந்த அதிநவீன பக்கவாத சிகிச்சை மூலம் நோயாளிகள் பயனடைவர்.

அதேபோல, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 17 நபர்களுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் இருவர் முற்றிலும் குணமடைந்துள்ளனர் என்றும் 3 பேர் பாதியளவில் முன்னேறியுள்ளதாக கூறினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...