கோவை: மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்று வெள்ளத்தில் காந்தவயல் உயர்மட்ட பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் மோட்டார் படகு போக்குவரத்து இயக்கப்பட உள்ளதாக சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காந்தவயல், உளியூர், ஆளூர் போன்ற கிராமங்கள் பவானி சாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் அமைந்துள்ளன. பழங்குடியின கிராமங்களான இங்கு சுமார் 3000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக பருவமழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து அதிகரிக்க துவங்கியது.
இதனால் மளமளவென உயர்ந்த நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 104 அடியை எட்டியதால் இந்த மூன்று கிராமங்களையும் நகர பகுதிகளுக்கு இணைக்கும் 30 அடி உயரம் கொண்ட காந்தையாற்று பாலம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியதுடன் பாலத்திற்கு மேல் சுமார் 10 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாக மேலும் தண்ணீர் அதிகரித்தால் பாலத்தை கடந்து சாலையில் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு தண்ணீர் சூழ்ந்து கடல் போல் காட்சி அளிக்கிறது.
இதனால் கிராம மக்களின் போக்குவரத்து முற்றிலும் முடங்கி பரிசல்கள் மூலம் எவ்வித பாதுகாப்புமின்றி 50 அடி ஆழத்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ராசாமனி அவர்களின் உத்தரவின் பேரில் சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் மூலம் நாளை முதல் மோட்டார் படகு போக்குவரத்து துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து மோட்டார் படகு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், ஆற்றின் ஆழம் கருதி பயணிப்போர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் லைப் ஜாக்கட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மோட்டார் படகை இயக்க நன்கு பயிற்சி பெற்ற கோட்டூர் பேரூராட்சி நிர்வாகத்தில் இருந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் என நான்கு பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒரே சமயத்தில் இருபது பேர் பயணிக்கும் வகையில் இந்த மோட்டார் படகு உள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாகவும் பெரியவர்களுக்கு 5 ரூபாய் கட்டணத்திலும் இந்த மோட்டார் படகு இயக்க உள்ளதாகவும் மக்கள் இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.