கோவை : டெல்லியில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : டெல்லியில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 3ம் தேதி தீஸ்ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவருக்கும் போலீசார் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதையடுத்து இருதரப்பிலும் நடைபெற்ற கைகலப்பில் பலர் காயமடைந்தனர். வழக்கறிஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு டெல்லி போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், டெல்லி போலீசாரை கைது செய்ய வலியுறுத்தியும், டெல்லி போலீசாரின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பினர். அதேபோல, காவல்துறை மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக எங்களின் போராட்டம் தொடரும் எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் கூறும்போது ;-

டெல்லி போலீசாரின் நடவடிக்கை ஒட்டுமொத்த வழக்கறிஞர்களின் பாதுகாப்பை அச்சுறுத்தி உள்ளது. இது கண்டிக்கக் கூடிய விஷயம். ஆகவே, வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.