கோவை : தென் மேற்கு வங்ககடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கோவையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மேலும் பெரும்பாலான இடங்களில் மழை காரணமாக மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக லேசாக பெய்து வந்த மழையானது, நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழையாக பெய்தது.
குறிப்பாக தமிழகத்தில் கோவை உட்பட நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர், திருநெல்வேலி, திருச்சி ,அரியலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, நள்ளிரவு முதல் காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, சுந்தராபுரம், ராமநாதபுரம், வடவள்ளி, உக்கடம், வெள்ளலூர், சரவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும், கோவை மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கன மழையினால் ஆங்காங்கே சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.