கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் மனிதக்கழிவுகளை அகற்றுவதற்காக முதன் முதலாக ரோபோட் எந்திரத்தின் செயல்பாட்டினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி துவக்கிவைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தெற்கு மண்டலம், சலிவன் வீதி, மாநகராட்சி மாரண்ண கவுடர் உயாநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதாக்கும் முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் 3 நபர்களுக்கு இளநிலை உதவியாளர் உடன் தட்டச்சா் பணியிடங்களும், ஒருவருக்கு அலுவலக உதவியாளராகவும், 23 நபர்களுக்கு துப்புரவு பணியாளா்களாகவும், 2 நபர்களுக்கு இசை ஆசிரியராகவும் ஆகமொத்தம் 29 நபர்களுக்கு கோயம்புத்தூர் மாநகராட்சியில் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கான பணி நியமன ஆணைகளை நகராட்சி நார்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
முன்னதாக, மனிதக்கழிவுகளை மனிதர்களைக் கொண்டு அகற்றுவதற்கு மாற்றாக கோயம்புத்தூர் மாநகராட்சியில் முதன் முதலாக பாதாளசாக்கடை கழிவுகள் அகற்றும் ரோபோ எந்திரத்தை அவர் பார்வையிட்டார். மாநகராட்சியின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக எச்.பி.சி.எல் நிறுவனம் ரூ.36 இலட்சம் மதிப்பிலான ரோபோ எந்திரத்தினை அமைச்சர முன்னிலையில் மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த எந்திரத்தின் செயல்பாட்டினை ஆர்.எஸ்.புரம் காந்திபார்க் பகுதியில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பின்னர் பார்வையிட்டார்.

மேலும், மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களுக்கும் 5 எண்ணிக்கையிலான கொசுப்புழு ஒழிப்பான் இயந்திரங்களின் பணிகளையும் அமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவண் குமார் ஜடாவத் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.