அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாணவிகள் மாநில மாநாடு; பழங்குடி மாணவிகளுக்கு தரமான விடுதிகள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவை: பழங்குடி மாணவிகளுக்கு தரமான விடுதிகள் அமைத்து கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாணவிகள் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

கோவை: பழங்குடி மாணவிகளுக்கு தரமான விடுதிகள் அமைத்து கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாணவிகள் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.



அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாணவிகள் மாநில மாநாடு இன்று காலை பேரணியுடன் துவங்கியது. கோவை பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் இருந்து துவங்கி டாக்டர் பாலசுந்தரம் சாலை, எ.டி.டி.காலனி, வழியாக வ.உ.சி. பார்க் மைதானத்தை அடைந்து அங்கு நிறைவு செய்யப்பட்டது.



இதன் பின்னர் மாநாடு காட்டூரில் உள்ள தியாகிகள் நிலையத்தில் நடைபெற்றது. மாநாட்டில் மேடை நாடகம், பாரத நாட்டியம், சிலபாட்டம், பறையிசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதன் பின்னர் மாநாட்டில் தீர்மானங்கள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

1. பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவ வழக்கினை சிறப்பு நீதிமன்றம் அமைத்து விரைவாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

3. பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் மாதவிடாய் காலங்களின் போது சுகாதாரமற்ற முறையில் துணிகளை உபயோகப்படுத்துகின்றனர். இதனால், பல்வேறு நோய் தொற்று உண்டாகிறது. இதற்காக அரசு உடனடியாக அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் கழிவறைகளில் இலவச தரமான "நாப்கின்கள்" வழங்க ஏற்பாடு செய்யுமாறு அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

4. பள்ளி, கல்லூரிகளில் கழிவறைகளில் உபயோகித்த நாப்கின்களை அப்புறப்படுத்த போதுமான உபகரணங்கள் இல்லை. இதனால் நோய் தொற்று, விஷப்பூச்சிகள் நிரம்பக் காணப்படுகிறது. அதை கட்டுப்படுத்தும் விதமாக அரசு அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் "நாப்கின் எரியூட்டும் சாதனத்தை" அமைக்க இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

5. இப்போது பல பள்ளிகளில் மாணவிகளையே கழிவறைகளை சுத்தம் செய்ய விதிக்கப்படுகிறார்கள். இதில் ஜாதிய ரீதியான தாக்குதல்களிலும் பள்ளி நிர்வாகம் ஈடுபடுகிறது. இதைத் தடுக்கும் விதமாக அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் "அரசின் தூய்மைப் பணியாளர்"களை வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

6. பள்ளிகளில் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் பள்ளி விடுமுறை நாட்களில்,பள்ளிகளில் வகுப்புக்கள் இயங்குகிறது. இதில் சொர்ப்பமான மாணவர்களும் சில ஆசிரியை-ஆசிரியர்களுமே கலந்து கொள்கின்றனர். இந்த சூழலில் மாணவியர்களை பாலியல் ரீதியாக சில ஆசிரியர்கள் மிரட்டுவதாக பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனைக் கட்டுப்படுத்த "ஒரு ஆசிரியை ஒரு ஆசிரியர்" வீதம் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளுக்கு கட்டாயம் வர வேண்டும் என அரசு ஆணைப்பிறப்பிக்க இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

7. இன்றைய சமூகச் சூழ்நிலை, பள்ளித் தேர்வுகள், உடல் சோர்வு ஆகியவை மாணவிகளுக்கு மன அழுத்தம் தரக்கூடியவையாக உள்ளது. இதனை சரி செய்யும் விதமாக பள்ளிகள், கல்லூரிகள் தோறும் அரசு உளவியல்துறை சார்ந்த மருத்துவர்களைப் பணி அமர்த்த வேண்டும் என இந்த மாநாடு அரசை வலியுறுத்துகிறது.

8. ஆய்வுப் படிப்புகள் மேற்கொள்ளும் மாணவிகளுக்கு அதிகளவில் மறைமுகமாக பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்று வருகிறது. தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி வெளியே கூறினால், முனைவர் பட்டம் பெற முடியாத சூழல் ஏற்படுவதால், வெளியுலகத்திற்கு தெரியாமல் போய்விடுகிறது. எனவே, முனைவர் பட்டம் மாணவிகளுக்கென தனிக்குழுக்கள் அமைத்து, இதுபோன்ற பிரச்சினைகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9. ஓராசிரியர் பள்ளி எனக்காரணம் காட்டி பள்ளிகள் மூடப்படுவதை நிறுத்த வேண்டும். ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

10. பழங்குடி மாணவிகளுக்கான தரமான விடுதிகள் அமைத்து, அவர்களுக்கு கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பின்னர், மாநில ஒருங்கிணைப்பாளராக கோவையை சேர்ந்த பூர்ணிமா நந்தினி தேர்வு செய்யப்பட்டார். பாசிலா, கோகிலா, ரேவதி, ரஞ்சனி கண்ணம்மா, ஜீவா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநில ஒருங்கிணைப்பாளர் ச.பூர்ணிமா நந்தினி வரவேற்றுப் பேசினார்.

கேரள மாநில மாணவர் பெருமன்றத்தின் துணை செயலாளர் நிமிஷா ராஜு, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில செயலாளர் மஞ்சுளா, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில தலைவர் குணசேகர், மாநில செயலாளர் தினேஷ், பள்ளிக்கல்வி மாநில ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...