கோவையில் இரண்டு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை

கோவை : கோவை உக்கடம் பகுதிகளில் உள்ள இரண்டு வீடுகளில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


கோவை : கோவை உக்கடம் பகுதிகளில் உள்ள இரண்டு வீடுகளில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.



கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கு, இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய வழக்கு மற்றும் இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் குறித்த வழக்குகள் தொடர்பாக கோவையில் அவ்வப்போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனைகள் செய்து வருகின்றனர்.



இந்த நிலையில், இன்று உக்கடம் ஜி.எம் நகரில் வசித்து வரும் நிசார் என்பவரது வீட்டிலும், அதேபோல உக்கடம் லாரிபேட்டையில் வசித்து வரும் செளருதீன் என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.



ஏற்கனவே கோவையில் நடைபெற்ற சோதனைகளில் வீடுகளில் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையையடுத்து, கோவை மாநகர போலீசார் அப்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். கோவையை போல சிவகங்கை, திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் 2 மடிக்கணினிகள், 8 செல்போன்கள், 5 சிம் கார்டுகள், ஒரு மெமரி கார்டு மற்றும் 14 ஆவணங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைப்பற்றினர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...