கோவை : முப்பது ஆண்டுகளாக இயக்கப்பட்ட பசஞ்சர் ரயில் சேவை நேற்றுடன் நிறைவுற்று இன்று முதல் கோவை - மேட்டுப்பாளையம் இடையே புதிய நவீன வசதிகள் பெட்டிகள் கொண்ட மெமோ ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.
கோவை : முப்பது ஆண்டுகளாக இயக்கப்பட்ட பசஞ்சர் ரயில் சேவை நேற்றுடன் நிறைவுற்று இன்று முதல் கோவை - மேட்டுப்பாளையம் இடையே புதிய நவீன வசதிகள் பெட்டிகள் கொண்ட மெமோ ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கடந்த முப்பது ஆண்டுகாலமாக டீசல் எஞ்சின் மூலம் தினசரி பசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வந்தது. பின்னர், அது மின்சார ரயிலாக மாற்றப்பட்டதை அடுத்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பயணிகளின் வசதிக்காக மக்களின் கோரிக்கையை ஏற்று மெமோ ரயில் போக்குவரத்தினை இயக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து, கடந்த முப்பது ஆண்டுகளாக இயக்கப்பட்ட பசஞ்சர் ரயில் சேவை நேற்றுடன் நிறைவுற்று இன்று முதல் கோவை மேட்டுப்பாளையம் இடையே மெமோ ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. சென்னை ஜ.சி.எப் ரயில்வே தொழிற்சாலை தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன ரயிலில் இரண்டு பக்கமும் எஞ்சின் உள்ளது. எட்டு பெட்டிகள் கொண்ட இந்த ரயில் 614 பேர் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் வகையிலும் 1781 நின்று கொண்டு பயணிக்கும் வகையிலும் என ஒரே சமயத்தில் இரண்டாயிரத்து அறுநூறு பேர் பயணிக்கலாம். மேலும், பாதுகாப்புக்காக 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் மும்பையில் இயங்கும் புறநகர் இரயில்களை போன்ற இந்த இரயில் சேவை இந்தியாவில் கடந்த 1990ம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. குறைந்த தூரங்களுக்கு சுமார் 105 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் இந்த இரயில்கள் மற்றும் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இந்த ரயிலுக்கான சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 8.30 மணிக்கு கோவை புறப்பட்டுச் சென்றது. மேட்டுப்பாளையத்திற்கு புதிய மெமோ ரயில் சேவை துவங்கியதை பயணிகள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.