112வது தேவர் ஜெயந்தி விழா: முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

கோவை : முத்துராமலிங்க தேவர் 112வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவை ஒலம்பஸ் பகுதி 80 அடி சாலை மாகாளி அம்மன் கோவில் அருகே உள்ள முத்துராமலிங்க தேவர் உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கோவை : முத்துராமலிங்க தேவர் 112வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவை ஒலம்பஸ் பகுதி 80 அடி சாலை மாகாளி அம்மன் கோவில் அருகே உள்ள முத்துராமலிங்க தேவர் உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் ஏராளமான மக்களும் அரசியல் தலைவர்களும் மரியாதை செய்வது வழக்கம்.

இந்த நிலையில், முத்துராமலிங்க தேவர் 112வது ஜெயந்தி விழா மற்றும் 57 குரு பூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை ஒலம்பஸ் பகுதி 80 அடி சாலை மாகாளி அம்மன் கோவில் அருகே உள்ள முத்துராமலிங்க தேவர் உருவப்படம் மலர்களால் அலகரிக்கபட்டு இருந்தது. மேலும், அங்கு மருது பாண்டியர், வேலு நாச்சியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 



அ.தி.மு.க சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், பா.ஜ.க சார்பில் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், தேவர் பேரவை, புலி படை அமைப்பினர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் உதயகுமார், சக்திவேல், ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...