கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் குரங்கு அருவி அருகே மான் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் மான் மற்றும் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் குரங்கு அருவி அருகே மான் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் மான் மற்றும் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் குரங்கு அருவி அருகே கடமான் ஒன்று ரோட்டை கடக்க முற்பட்டபோது, பொள்ளாச்சியை சேர்ந்த வடுக பாளையம் காளீஸ்வரன் என்பவர் தனது நண்பருடன் இரண்டு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த போது கடமான் மீது மோதியதில் கடமான் இறந்துவிட்டது.
மேலும், வாகனத்தை ஒட்டி வந்த காளீஸ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் சிறு காயத்துடன் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.