கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அவர்களின் உத்தரவின் எதிரொலியாக கோவை மாநகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் தனியார்கள் மற்றும் பொது இடங்களில் தோண்டப்பட்டு தற்போது, பயன்பாடற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டு உள்ளாட்சித்துறை மற்றும் வருவய்துறை அலுவலர்களால் மூடப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அரசுத்துறைகள் மூலமாகவும், தனிநபர் விவசாய நிலங்கள் மற்றும் தனிநபர் வணிக நோக்கத்திற்காகவும், ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும் அதனை பாதுகாப்பான முறையில் மூடி வைக்கவும், ஏற்கனவே அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இருந்தபோதிலும், ஆங்காங்கே சில நேர்வுகளில் அவ்வாறு நிறுவப்பட்டு உள்ள ஆழ்துளை கிணறுகளில், பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் உரிய பாதுகாப்பான முறையில் மூடப்படாமல் உள்ளதால் எதிர்பாராத சில சம்பவங்கள் ஏற்படுகிறது.

எனவே இதனைத் தடுக்கும் வகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு துறைகள் மற்றும் தனிநபர் நிலங்களில் உள்ள பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள், சிமெண்ட் சிலாப் போட்டு மூடப்பட்டிருக்க வேண்டும். இதனை மாநகராட்சிப் பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளரும், நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையாளரும், பேரூராட்சிப் பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடனும், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு மற்றும் தனிநபர் நிலங்களில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் உரிய பாதுகாப்பான முறையில் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, அரசு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கள ஆய்வுகளில் கோவை மாவட்டத்தில் பயன்பாடற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் உள்ளாட்சித்துறை, வருவாய் துறை அலுவலர்கள் மூலம், முறையாக மூடப்பட்டுள்ளது. மேலும், இப்பணியினை வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்களும் இதனை கண்காணித்து வருகிறார்கள்.
மேலும், பொதுமக்களும், தங்களது இடங்களில் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடி பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்கும்படியும், ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகள் இருப்பின் கீழ்க்கண்ட இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இலவச தொலைபேசி எண்- 1800-599-6000.