கோவை : கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்துறை அலுவலக அறைகளை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இன்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர் ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களில் உள்ளே வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு அலுவலக வளாகத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த அரசு மற்றும் தனியார் வாகனங்களை காவல்துறையினர் உதவியுடன் அதிரடியாக அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து ஏராளமான வாகனங்களை போலீசார் டோவிங் வாகனங்கள் மூலம் அகற்றினர்.

இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்திருந்த நிலையில், ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் புதர்மண்டிக்கிடந்த இடங்களை சுத்தம் செய்து வாகன நிறுத்தம் அமைக்க ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்துறை அறைகளை மாவட்ட ஆட்சியர் இன்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பயன்பாடின்றி இருந்த அறைகளை உடனடியாக சுத்தப்படுத்தி பிற துறைகளுக்கு ஒதுக்குமாறு உத்தரவிட்ட ஆட்சியர், பழைய ஆவணங்களை ஷிரெட்டர் மூலம் வெட்டி அகற்றுமாறும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். அரிசி கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, கடந்த பல ஆண்டுகளாக ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.