திருப்பூர் : திருப்பூரில் கலால் உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.1,09,280 ரொக்கம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் 129, 130வது அறையில் கலால் உதவி ஆணையர் அலுவலகம் அமைந்துள்ளது. தீபாவளி சமயம் என்பதால் மதுபான கூடங்கள், லாட்ஜ் உள்ளிட்டவற்றில் இருந்து தீபாவளி அன்பளிப்பாக பணமோ, பரிசுப்பொருளோ லஞ்சமாக வழங்கப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்..
அப்போது, கணக்கில் வராத சுமார் 1,09,280 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கலால் உதவி ஆணையர் ஜெயராணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.