கோவை : தீபாவளி பண்டிகையையொட்டி கோவை மத்திய சிறையில் இந்து இயக்கங்களின் சார்பில் பல்வேறு வழக்குகளில் சிறை சென்ற கைதிகளுக்கு இனிப்பு வழங்க சிறை நிர்வாகம் மறுத்ததையடுத்து, இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் ஒன்று கூடி சிறை நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மத்திய சிறையில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்த கைதிகளுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் தீபாவளி பண்டிகையையொட்டி கோவை மத்திய சிறையில் உள்ள 50க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு இனிப்பு வழங்க சென்றனர். ஆனால், சிறைத்துறை நிர்வாகம் இனிப்பு வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து அவ்வமைப்பினர் மத்திய சிறை நிர்வாகத்திடம் உள்ளே இனிப்பு வழங்க அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர். மேலும், இந்த அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் சிறை முன்பு கூடியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

பின்னர் தகவலறிந்து வந்த பந்தய சாலை போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சிறை நிர்வாகம் இனிப்பு வழங்க அனுமதித்தது. இதைத்தொடர்ந்து இந்து முன்னணியின் நிர்வாகக்குழு குணா, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் நந்தகுமார் மற்றும் இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் தனபால் ஆகியோர் சிறைவாசிகளுக்கு இனிப்பு வழங்கினர்.