விபத்து, மாசு மற்றும்‌ ஒலியில்லாத தீபாவளியை கொண்டாடுவோம்‌ : மாவட்ட ஆட்சியர் தீபாவளி வாழ்த்து

கோவை : கோவையில் விபத்து, மாசு மற்றும்‌ ஒலியில்லாத தீபாவளியை கொண்டாடுவோம்‌ என கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவை : கோவையில் விபத்து, மாசு மற்றும்‌ ஒலியில்லாத தீபாவளியை கொண்டாடுவோம்‌ என கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீமையினை நன்மை வென்றதை நினைவுபடுத்தும்‌ விதமாகவும்‌, நமது கலாச்சாரத்தையும்‌, மரபையும்‌ வெளிப்படுத்தும்‌ விதமாகவும்‌, இந்தியா முழுவதும்‌ பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகை மிகச்‌ சிறப்பாகக்‌ கொண்டாடப்படுகிறது.

அதேசமயம், தீபாவளி பண்டிகை போது அதிகளவில் பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில், கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம்‌ வெளியிட்ட ஆணையில்‌, சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும்‌ எனவும்‌, வருங்காலத்தில்‌ பசுமைப்‌ பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும்‌ எனவும்‌ நிபந்தனைகளை விதித்தது.

அதேபோல, பட்டாசுகளை வெடிப்பதால்‌ காற்றின்‌ தரம்‌ பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்‌ எனவும்‌, திறந்தவெளிகளில்‌ குறிப்பிடப்பட்ட பகுதிகளில்‌ மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள்‌ வலியுறுத்த வேண்டும்‌ எனவும்‌ அறிவுறுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகை நாளன்று இரண்டு மணி நேரத்திற்கு மேல்‌ பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்க இயலாது எனவும்‌, அந்த 2 மணி நேரத்தை தமிழ்நாடு அரசே தீர்மானித்துக்‌ கொள்ளலாம்‌ எனவும்‌ உச்ச நீதிமன்றம்‌ உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்‌ அடிப்படையில்‌, தமிழ்நாடு அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல்‌ 7 மணி வரையும்‌, இரவில்‌ 7 முதல்‌ 8 மணி வரையும்‌ அனுமதி வழங்குகிறது. மேலும், பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாட்டின்‌ அனைத்து மாநகராட்சிகளிலும்‌, தீபாவளிக்கு முன்பு ஏழு நாட்களும்‌ தீபாவளிக்கு பின்பு ஏழு நாட்களும்‌ மொத்தம்‌ 14 நாட்கள்‌ தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்‌ காற்றின்‌ தரத்தை அளவீடு செய்யும்‌.

மாசில்லா சுற்றுச்சூழலை பேணிக்‌ காப்பது நம்‌ ஒவ்வொருவரின்‌ கடமையும்‌ பொறுப்பும்‌ ஆகும்‌. இதனைக் கருத்தில்‌ கொண்டு, பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவதற்கு பொது மக்கள்‌ கடைபிடிக்க வேண்டும் என்றார். அதன்படி,

1. பொதுமக்கள்‌ குறைந்த ஒலியுடனும்‌, குறைந்த அளவில்‌ மாசுபடுத்தும்‌ தன்மையும்‌ கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும்‌.

2. உள்ளாட்சி அமைப்புகளின்‌ முன்‌ அனுமதியுடன்‌, பொதுமக்கள்‌ திறந்த வெளியில்‌ ஒன்று கூடி, கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்த அந்த பகுதிகளில்‌ உள்ள நல சங்கங்கள்‌ மூலம்‌ முயற்சிக்கலாம்‌.

தவிர்க்க வேண்டியவை 

1. அதிக ஒலி எழுப்பும்‌ தொடர்ச்சியாக வெடிக்கக்‌ கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம்‌.

2. மருத்துவமனைகள்‌, வழிபாட்டுத்‌ தலங்கள்‌ மற்றும்‌ அமைதி காக்கப்படும்‌ இடங்களில்‌ பட்டாசுகள்‌ வெடிப்பதைத்‌ தவிர்க்க வேண்டும்‌.

3. குடிசை பகுதிகள்‌ மற்றும்‌ எளிதில்‌ தீப்பற்றக்‌ கூடிய இடங்களுக்கு அருகில்‌ பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்‌. மக்கள்‌ அனைவரும்‌ விபத்தில்லா மற்றும்‌ மாசில்லா தீபாவளியை சிறப்பாகக்‌ கொண்டாடுவோம்‌ என அனைவருக்கும்‌ இதயங்கனிந்த தீபாவளி நல்‌ வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...