ஸ்டாலின் அளித்த பொய்யான வாக்குறுதி மக்களிடம் எடுபடவில்லை : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

கோவை : திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அளித்த பொய்யான வாக்குறுதி மக்களிடம் எடுபடவில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

கோவை : திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அளித்த பொய்யான வாக்குறுதி மக்களிடம் எடுபடவில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்:-

இடைத்தேர்தல் வெற்றி வரலாற்று சிறப்பு சரித்திரம் வாய்ந்த வெற்றியாக கருதுகின்றோம். ஏற்கனவே நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் பொய்யான வாக்குறுதியை திமுக கூட்டணி் தலைவர்கள் கொடுத்து வெற்றி பெற்றனர். தற்போது, மக்களுக்கு உண்மை தெரிந்து விட்டதால் அதிமுக கூட்டணியை வெற்றி பெற வைத்திருக்கின்றனர் என தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் மக்கள் நல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம் எனவும், தொடர் செயல்பாடுகளால் பல விருதுகளையும் பெற்று இருக்கின்றோம் என தெரிவித்த அவர், சட்டம் ஒழுங்கு சிறந்த மாநிலமாக தமிழகம் இருந்து வருவதாகவும், தொழில் செய்வதற்கு உகந்த மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் கூறினார்.

மேலும், தமிழகத்தில் உகந்த சூழல் இருப்பதால் சமீபத்தில் நடந்த தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு 3 லட்சத்து 431 கோடி ரூபாய்க்கு தொழில் துவங்க தொழிலதிபர்கள் முன் வந்து இருப்பதாகவும், அவை தற்போது துவக்க நிலையில் இருப்பதாகவும், தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அளித்த பொய்யான வாக்குறுதி மக்களிடம் எடுபடவில்லை எனவும் இந்த தேர்தல் வெற்றி மூலம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மக்கள், பொய் வாக்குறுதி கொடுக்கக் கூடாது என எச்சரிக்கை மணி எழுப்பியிருக்கின்றனர் என தெரிவித்தார்..

உள்ளாட்சி தேர்தல் குறித்த நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தெரிவித்த அவர், உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என தெரிவித்தார். டெங்குவை தடுக்க பொதுமக்களும் வீடுகளில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், அரசு மருத்துவமனைகளை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

பின்னர், விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக வை வெற்றிபெற செய்த மக்களுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...