கோவையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்து கலந்தாய்வுக்‌ கூட்டம்‌

கோவை : கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தலைமையில்‌ அனைத்து மண்டல உதவி ஆணையர்கள்‌, பொறியாளர்கள்‌, சுகாதார அலுவலர்களுடன்‌ கலந்தாய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌ முன்னிலை வகித்தார்.

கோவை : கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தலைமையில்‌ அனைத்து மண்டல உதவி ஆணையர்கள்‌, பொறியாளர்கள்‌, சுகாதார அலுவலர்களுடன்‌ கலந்தாய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌ முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது :

கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ பேட்டரி வாகனங்கள்‌ கொண்டு கொசுப்புழுக்கள்‌ பரவாமல்‌ மருந்துகள்‌ தெளிக்கும்‌ பணிகளை கொசு ஒழிப்பு பணியாளர்கள்‌, துப்புரவுப் பணியாளர்கள்‌ ஆகியோர்‌ தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும்‌. மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள்‌, துப்புரவு பணியாளர்கள்‌ வீடு வீடாகச்‌ சென்று கொசுப்புழுக்கள்‌ பரவாமல்‌ இருக்க அபேட்‌ மருத்துகளையும்‌, ஆய்வுகளையும்‌ மேற்கொள்ள வேண்டும்‌. பொதுமக்கள்‌ தங்களின்‌ வீடு தேடிவரும்‌ கொசு ஒழிப்பு பணியாளர்கள்‌, துப்புரவு பணியாளர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்‌ என்றார்.

மேலும்‌, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகளை சுகாதாரப்‌ பணியாளர்கள்‌, கொசு ஓழிப்பு பணியாளர்கள்‌, சுகாதார அலுவலர்கள்‌ ஆகியோர்‌ எவ்வித தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்தார்.



இக்கூட்டத்தில்‌ மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, மண்டல உதவி ஆணையாளர்கள்‌ தி.ரா.ரவி, செந்தில்குமார் ரத்தினம்‌, ஏ.ஜே.செந்தில்‌அரசன்‌, ம.செல்வம்‌, மகேஷ்கனகராஜ்‌, மாநகர கல்வி அலுவலர்‌ கே.பழனி, நகர்நல அலுவலர்‌ கே.சந்தோஷ்குமார்‌, செயற்பொறியாளர்கள்‌ ஞானவேல்‌, சரவணகுமார்‌, பார்வதி மற்றும்‌ மண்டல சுகாதார அலுவலர்கள்‌, ஆய்வாளர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...