கோவை : தீபாவளி பண்டிகைக்காக ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் பருப்பில்லாத பாயாசம் மற்றும் சர்க்கரை இல்லாத கேசரி செய்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்னும் இரு தினங்களில் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில், இதுவரை ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்க கூடிய அத்தியாவசிய பொருட்களான பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்றவை வழங்கவில்லை என குற்றம்சாட்டியும், அதனை உடனடியாக வழங்க கோரியும் கோவை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை காட்டூர் மாதர் சங்க அலுவல முன்பு உள்ள சாலையில் பருப்பில்லாத பாயாசம் மற்றும் சர்க்கரை இல்லாத கேசரி செய்து, மக்களின் அவல நிலை குறித்து விளக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் செய்த அதிமுக அரசு , சாதாரண மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யவில்லை என குற்றம்சாட்டினர். மேலும் ரேசன் கடைகளில் விரைந்து சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.