ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டு வணிக திட்டத்திற்கு எதிர்ப்பு: விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை : ஆசியா பசிபிக் மண்டலத்தின் பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்ததை கண்டித்து இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : ஆசியா பசிபிக் மண்டலத்தின் பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்ததை கண்டித்து இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய அரசாங்கம், சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு பொருளாதார கூட்டு வணிக ஒப்பந்தம் குறித்து பேசி வருகிறது. இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், விவசாயம் சார்ந்த சந்தைப்பொருட்கள் பலவற்றின் மீதான இறக்குமதி வரி, நிரந்தரமாக பூஜ்ஜியத்திற்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.


இதன் மூலம், பல நாடுகள் தங்களது விவசாய விளை பொருட்களை, நம் இந்திய நாட்டில் வியாபாரம் செய்ய தயாராக உள்ள நிலையில், பால்பண்ணை, பருத்தி, தேயிலை, காபி, உள்ளிட்ட பணப்பயிர்கள் பயிரிடும் தோட்டத்துறைக்கும் அபாயகரமான நிலை ஏற்படும் என விவசாயிகளிடையே அச்சம் நிலவி வருகிறது.

இந்த ஒப்பந்தம் மூலம் நமது நாட்டு விவசாயிகளுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் சாதகமாக அரசு செயல்பட்டால், வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் தேசிய நீதிமன்றங்களை புறந்தள்ளி இந்திய அரசாங்கம் மீதே வழக்கு போட முடியும் என்பதோடு வெளி நாட்டு முதலீட்டாளர்கள் நமது நாட்டில் விவசாய நிலங்களை வாங்க முடியும். இதனால் பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்கள், உள்ளூர் சந்தைகள் அழிவதற்கு இந்த ஆர்செப் ஒப்பந்தம் வழிவகுக்கும் என விவசாய சங்கங்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.


இதையடுத்து, இந்த ஒப்பந்தம் முழுமை பெறுவதற்கு முன்பே தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தி, தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி தமிழக விவசாயிகள் சங்கம், உழவர் உழைப்பாளர் கட்சியினர் மற்றும் இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவினர் செஞ்சிலுவை சங்கம் முன்பு மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...